<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Monday, October 10, 2005

ரமேஷ் மகாதேவன்

நேற்று மதியம் ஃபுட்பால் போட்டியில் வாஷிங்டன் டென்வரிடம் உதைபட்டுக் கொண்டிருந்த போது, ரமேஷ் மகாதேவன் நினைவுக்கு வந்தார்.

முந்தியொரு காலத்தில் முருங்கை மரக்காட்டிற்குள் Soc.culture.tamil, Soc.culture.indian என்றெல்லாம் வலைக்குழுமங்கள் இருந்தன. அமெரிக்கா போய் பி.எச்டி செய்வதாய் வீட்டில் சொல்லி விட்டு இங்கு வந்து ஒ.பி விட்டுக் கொண்டிருந்த ஏராளமான மாணவர்களின் புகலிடம். பின் வரப்போகும் வலைப்பதிவுப் பின்னூட்ட சண்டைகளுக்கு முன்னோடிகளாக அங்கும் சில கூத்துகள் நிகழ்ந்தேறின.


அந்த சண்டைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நின்று, ரமேஷ் மகாதேவன் என்ற மாணவர் சில அருமையான நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார். பெரும்பாலும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்த மாணவர்களின் வாழ்வை 'அஜய் பல்வயந்தீஸ்வரன்' என்ற கற்பனைப் பாத்திரத்தின் மூலம் சித்தரிக்கும் இக்கட்டுரைகளின் தொகுப்பு வலையில் சுலபமாகக் கிடைக்கிறது. மாணவர்களின் வாழ்வைத் தவிர, பயணக் கட்டுரைகளும் (அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களுக்கும் சென்று வந்தவர்), ஐ.ஐ.டி பற்றிய கட்டுரைகளும், இதர சில துக்கடாக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் சாம்பார் செய்வதை விளக்கும் ஒரு கட்டுரை, கர்நாடக இசையை எளிமையாக விளக்கும் ஒரு சிறு தொடர், ஸ்ரீதேவியைப் பற்றி ஒரு கட்டுரை என இவர் இயல்பான நகைச்சுவையுடனும், சரளமான நடையுடனும் எழுதியுள்ள கட்டுரைகள் சிலவற்றிலிருந்து சில மொழிபெயர்ப்பு மேற்கோள்கள் -

"இந்த நாட்டிற்கு வந்து இறங்கிய உடன், நம்மில் பலர் நாடோடிகளாக மாறி விடுகிறோம். வகுப்பு நண்பர்கள், விடுதி நண்பர்கள் என்று ஒரு கோஷ்டி திரட்டிக் கொண்டு, ஒரு பழைய காரை அடைத்துக் கொண்டு, நேர எல்லைகளைக் கடந்து பயணம் செய்கிறோம். வழியில், சில நகரங்கள், ஒன்றிரண்டு தேசியப் பூங்காக்கள் ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டு, ஒரு புதிய டி-ஷர்ட் அறுவடையுடன் வீடு வந்து சேர்கிறோம். போகும் வழியில், ஒரு மலையடிவாரத்தில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்கையில், நம்மைப் போலவே ஒரு தேசி கும்பல், நம்மதைப் போலவே ஒரு காரில் வந்திறங்கும். நம்மில் ஐந்தில் நால்வர் அவர்களில் ஐந்தில் நால்வரை உதாசீனம் செய்தாலும், இங்கிருக்கும் ஐந்தாமவர் அங்கிருக்கும் ஐந்தாமவருக்கு 'ஹலோ' சொல்லி தேசி சகோதரத்துவத் தீ அணையாமல் பார்த்துக் கொள்வார்.'

- Discovering America - One more post on travel

"இது என்னை எப்போதுமே படுத்தியிருக்கிறது. சில வருஷங்களுக்கு முன்னால் எவெரெஸ்டின் உச்சியிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்போவதாக CBS தொலைக்காட்சியில் Dan Rather விளம்பரம் செய்தார். ஆனால், அந்த மலையேறு கோஷ்டியின் அமெரிக்கர்களால் மேலே சென்றடைய முடியாததால் ஒளிபரப்பு செய்ய முடியாமல் போனது. ரேதருக்கு ஒரே ஏமாற்றம். இருப்பினும், செய்தி அறிக்கையில், போனால் போகிறதென்று, "இந்தக் குழுவில் ஒரு ஷெர்பா உச்சியை அடைவதில் வெற்றி அடைந்தார். இதன் மூலம் எவெரெஸ்டை மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற பெருமை பெற்றார்' என்று சொல்லி வைத்தார். என்ன கொடுமையடா...அந்த ஷெர்ப்பாவிற்கு ஒரு பெயர் கிடையாதா? இப்படிப்பட்ட சாதனை செய்தவரின் பெயர் கூட சொல்ல அருகதையில்லையா? இதற்குப் பிறகு வெகு நாட்களுக்கு ரேதரின் செய்திகளை நான் புறக்கணித்தேன்'

'ஐ.ஐ.டி மக்கள் பிற ஐ.ஐ.டி மக்களோடு உறவாடுவதையே விரும்புகின்றனர். நம்மில் எத்தனை பேருக்கு ஒரு இன்ஜினியர் அல்லாத, டாக்டர் அல்லாத ஒருவரைத் தெரியும்? ஒரு ஓவியர்? ஒரு வழக்கறிஞர்?'

'இமய மலைத்தொடரில் சில வாரங்கள் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் போது, அங்கிருக்கும் மனிதர்களோடு வாழ்வது என்பது கட்டாயமாகிறது. சும்மா தஸ்ஸு புஸ்ஸென்று பேசித் தப்பிக்க முடியாது, நகரப் பாசாங்குகளை கொஞ்சம் மூட்டை கட்டி வைக்க வேண்டும். உண்மையாக நட்புணர்வுடன் பழக வேண்டும், குறுகிய காலத்திற்கேனும் நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; அவர்களை, அவர்கள் வாழ்வு முறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டின் மூலையில் நமது கம்பளத்தில் படுத்துக் கொள்வதில் சொகுசு ஒன்றுமில்லை தான், ஆனால் அம்மனிதர்களின் கருணை நமது கண்களைத் திறக்கும். ஏனெனில் ஒரு முகம் தெரியாத அன்னியன் எனது வீட்டில் உறங்க நான் என்றுமே அனுமதித்ததில்லை.'

- மூன்றுமே Hangin loose in Himalayas

'புதிய முகம்' படம் வந்த புதிதில், 'கண்ணுக்கு மை அழகு' பாடலைப் பகடி செய்து, அது போன்ற பாடலை எழுதுவது எவ்வளவு சுலபம் என்ற ரீதியில் எழுதப்பட்ட கட்டுரை:

'ஒரு பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் இயல்பு ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள், அது புதுமையாகவோ, கவித்துவமாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் கிடையாது. சும்மா ஒரு பொருள், ஒரு இயல்பு போது. பிறகு பொருளுக்கு இயல்பழகு - அவ்வளவுதான். உதாரணம்:

ரசத்துக்கு உப்பழகு, விஷத்துக்கு வார்னிங் அழகு,
பழத்துக்கு ஜூஸ் அழகு, கிழத்துக்குத் தடி அழகு
வயருக்கு கரண்ட் அழகு, வைகைக்கு கரை அழகு
வயிற்றுக்கு தொப்புள் அழகு, வைரத்துக்கு முத்தழகு'

இங்கே இந்த வைகை வரி ரொம்ப முக்கியம் - சில பழைய பஞ்சாங்கங்களை திருப்திப் படுத்த உதவும். கூடவே இந்த வைரத்துக்கு முத்தழகு என்பது போன்ற அர்த்தமில்லாத வரிகளை நுழைத்துக் கொள்ளலாம். யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள், கொஞ்சம் கவிதை மாதிரி, அர்த்தம் இருப்பது போல் இருந்தால் போதும். உண்மையில் அதில் ஒரு எழவு அர்த்தமும் இல்லை என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்'

- An Algorithmic Approach To Modern Tamil Verse

இவர் இப்பொழுது டென்வர் அருகே போல்டரில் வசித்து வருவதாகக் கேள்வி. எழுதுகிறாரா என்று தெரியவில்லை.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

10 Comments:

Blogger பரி (Pari) said...

http://mahadevanramesh.net/

October 10, 2005 9:29 PM  
Anonymous Anonymous said...

Read some where that he has returned to Chennai and running a company to bridge VCs to innovators or something like that.

October 10, 2005 10:22 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நல்ல பதிவு மற்றும் தகவல் சீரீகாந்த்
நன்றி
மயிலாடுதுறை சிவா...

October 10, 2005 11:11 PM  
Blogger Jayaprakash Sampath said...

ஆங்கிலத்திலே எழுதுபவர்களில் எனக்கு ரொம்பப் பிடித்தவர். அவருடைய எழுத்துக்களில் தென்படும் தமிழ் / சென்னை flavour தான் ரொம்ப விசேஷமான அம்சம். இப்போது சென்னையில் வசிக்கிறார். பரி கொடுத்த வலைமுகவரியில் தான் இப்போது எழுதுகிறார் ( அதாவது அவ்வப்போது). அவருடைய புதிய வலைத்தளத்திலே RSS feed ஐ பதிப்புச் செய்தால், வசதியாக இருக்குமே என்று ஆரம்பத்திலே ஒரு மடல் எழுதினேன். அவருக்கு இகாரஸ் என்ற பெயரில் யாரோ ஏற்கனவே நண்பர் இருக்கிறார் போலிருக்கிறது. அது நான் தானாக்கும் என்று நினைத்து முழநீளத்துக்கு உபயகுசலோபரி மடல் ஒன்றைத் தட்டிவிட்டார். எனக்கு வெல வெல என்று ஆகி....."அய்யா அது நானில்லை...தில்லி அய்அய்ட்டி பக்கமெல்லாம் மழைக்கு கூட ஒதுங்கியதில்லை" என்று பதில் போட்டபின்புதான் திருப்தியாச்சு. இன்னும் ஆர்எஸ்எஸ் போட்டாரா தெரியவில்லை. அப்பப்ப போய், புதுசா எதாவது வந்திருக்கான்னு பாத்துக்கறேன்.

October 10, 2005 11:24 PM  
Blogger Badri Seshadri said...

ரமேஷ் மகாதேவன் சென்னையோடு வசிக்க வந்துவிட்டார். கடந்த சில மாதங்களாக சென்னையில் இருந்தவர் இப்பொழுது அமெரிக்கா வந்துள்ளார் - தனது மிச்சம் மீதிகளை டிஸ்போஸ் செய்ய என்று நினைக்கிறேன்.

சென்னையில் Sri Sivasubramaniya Nadar College of Engineering-ல் சில பாடங்களை நடத்துவதாகச் சொன்னார்.

ஒரு வலைப்பதிவு அமைத்து அதில் (ஆங்கிலத்திலும், தமிழிலும்) எழுதுங்களேன் என்று சொன்னேன். ஆனால் அதில் இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை சென்னைக்கு அவர் திரும்பி வந்ததும் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

---

அது அஜய் பால்வாயன்-டீஸ்வரன் என்று நினைக்கிறேன்.

October 10, 2005 11:28 PM  
Anonymous Anonymous said...

http://mathy.kandasamy.net/musings/2005/06/28/238

October 10, 2005 11:58 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

ஸ்றீகாந்த்,
அந்த பெயரை 'பழைய வண்டீஸ்வரன்', 'பால் வாயண்டீஸ்வரன்' என்று ஒவ்வொரு முறையும் ஒரு மாதிரி புரிந்துகொண்டேன். ரமேஷ்-சுரேஷ் கதையும், பக்கத்து வீட்டு மாமா அமெரிக்கா வந்த கதையும் நன்றாக நினைவிருக்கின்றன. விஜய் ஃபாஃபட் என்று இன்னொரு மாராட்டிய ஆசாமியும் அந்நாட்களில் பிரபலமாக இருந்தார்.

பிரகாஷ்,
SCI இல் அந்நாட்களில் இகாரஸ் என்றொரு மலையாளத்துக்காரர் எழுதிக்கொண்டிருந்தார்.

October 11, 2005 12:24 AM  
Blogger Srikanth Meenakshi said...

பரி, பத்ரி, சுட்டிக்கும் தகவலுக்கும் நன்றி. ஆசாமி இங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டாரா....இவரது வலைத்தளம் கூகிளில் தேடிய போது அகப்படவில்லையே...

சுந்தரமூர்த்தி, பாபட்டை நன்றாக நினைவிருக்கிறது, ஆனால் என்ன, கூடவே ஜெய் மகராஜும் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்! :-)

October 11, 2005 8:36 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

ஸ்ரீகாந்த்,
ஜெய் மஹராஜ் பெயரைப் பார்த்தவுடம் ரமேஷின் Libel 101 என்ற நகச்சுவைக் கட்டுரையும் நினைவுக்கு வருகிறது. ஜெய் "வழக்கு போடுவேன்" என்று யாருக்கோ மிரட்டல் விட்டதைத் தொடர்ந்து எழுதப்பட்டது.

October 13, 2005 8:08 AM  
Blogger -/பெயரிலி. said...

/ஜெய் மகராஜும்/
சாதா ஜெய் இல்லை ஜோதிஸ்த ஜெய்

October 13, 2005 1:21 PM  

Post a Comment

<< Home