<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Friday, August 19, 2005

மழை? மழை!

சில வாரங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் ஒரு ஆரூடம் சொல்லியிருந்தார் - இது பார்த்திப வருடம் என்பதால், சோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் சென்னையிலும், தமிழகத்திலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது என்று. 'ஒவ்வொரு பார்த்திப ஆண்டும் இது போல நிகழ்ந்திருப்பதாக வரலாறு சொல்கிறது, அதை வைத்துச் சொன்னேன்' என்று பின்னர் சமாளித்தது வேறு விஷயம்.

இந்த வார விகடனில், சுஜாதா கட்டுரையில், இதே கணிப்பை தமிழக வானிலை மையமும் செய்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

இந்த வானிலைக் கணிப்பை முன்னமேயே தெரிந்து கொண்டு ஜெயலலிதா தனது ஆரூடத்தைச் சொல்லியிருக்கலாம்; அல்லது, முதல்வர் சொன்னது அறிவியல் உண்மை தான் என்று ஒத்து ஊதுவதற்காக வானிலை மையம் இந்தக் 'கணிப்பைச்' செய்திருக்கலாம். அவ்வாறெல்லாம் இருந்தால் சுவாரசியமில்லை.

அவ்வாறில்லாம, சோதிடமும் அறிவியலும் ஒரே கணிப்பைச் சொல்லியிருக்குமாயின் கொஞ்சம் சுவாரசியமான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கிறது.

சின்ன வயசில் 'துளசிதளம்' என்ற மொழிபெயர்ப்பு நாவல் படித்தது நினைவுக்கு வருகிறது. ஒரு சிறுமிக்கு வந்திருக்கும் கடுமையான நோய்க்குக் காரணம் மருத்துவமா, மாந்த்ரீகமா என்பது பற்றிய மர்ம/திகில் நாவல். நாவலின் இறுதியில் அந்தக் 'காஷ்மோரா' பேய்க்கு எதிராக நடத்தப்படும் யாகமும், சிறுமிக்கு நடக்கும் அறுவை சிகிச்சையும் ஒரே நொடியில் முடிவுற, சிறுமி உயிர் பிழைப்பாள். பிழைத்ததற்குக் காரணம் எது என்பது வாசகரின் ஊகத்திற்கு ஆசிரியர் விட்டு விடுவார்.

இந்த வருடம் கொட்டோ கொட்டென்று கொட்டினால், அறிவியலா, ஆன்மீகமா என்று அதே போல் கேள்வி கேட்டு, ஊர் ஊராக பட்டிமன்றம் வைக்கலாம்.

கொட்டா விட்டால்? எப்பொழுதும் போல 'கிருஷ்ணா, நீ பேகனே பாரோ' என்று பல்லவி பாடலாம்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger Machi said...

தமிழ் நாட்டில் அரசவைப்புலவர் இருக்கிற மாதிரி தெரியலை, ஆனா ஆஸ்தான சோதிடர் இருக்கிறார் என்பது தெரிகிறது. மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று ஆருடம் சொல்லியதோடல்லாமல் கால்வாய்களை தூர்வாரி செப்பனிட்டால் பாராட்டலாம்.
சுஜாதா தமிழ் நாட்டு வானிலை அறிக்கையை நம்புகிறாரா? " இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உட்புற மாவட்டங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்தாலும் பெய்யும் பெய்யாமலும் இருக்கும் " - இது தான் தமிழகத்தின் நிரந்தர வானிலை அறிக்கை.
சரி நீங்க தமிழ் நாட்டு வானிலை அறிக்கையை நம்புறீங்களா?

August 21, 2005 2:55 PM  
Blogger Narain Rajagopalan said...

எண்டமூரி வீரெந்திரநாத் பற்றி திடீரென படிக்கவேண்டும் என்று தோன்றியது. நீங்கள் சொன்ன அந்த கதை துளசிதளம். எனக்கு கதையின் பெயரை விட காஷ்மோரா என்கிற பெயர் தான் வசீகரித்தது. மறுபடியும் எங்கையாவது கிடைக்குமா, படிக்கலாமா என்று தேடியபோது இது கிடைத்தது. பரவாயில்லை, நானும் தமிழில் கொஞ்சமாய் படித்திருக்கிறேன் என்கிறு குறுகுறுப்புதான் இப்போதைக்கு instant gratification.

தலைப்புக்கு ஏற்றாற் போல இங்கே கனமழை பொழிந்து கொண்டிருக்கிறது, பார்திப வருஷ கேலண்டர் இஸ்லாமிய நாட்டில் கிடைக்குமா என்று தெரியவில்லை :)

December 01, 2009 11:52 PM  

Post a Comment

<< Home