<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Monday, August 08, 2005

மதியிறுக்கம் (Autism) - ஒரு எளிய அறிமுகம் - 2

முதல் பகுதி

நோயின் அறிகுறிகள்

பல மன நல நோய்களைப் போல மதியிறுக்கத்தைக் கண்டறிவதற்கும் எந்த உடல் ரீதியான மருத்துவப் பரிசோதனையும் இல்லை. இரத்தப் பரிசோதனை செய்தோ, எக்ஸ்-ரே எடுத்தோ இதைக் கண்டறிய முடியாது. ஒரு குழந்தை எப்படிப் பழகுகிறது என்பதை வைத்தே இதைக் கண்டறிய முடியும்.

இந்த நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம், மூன்று வயதிற்குள்ளரே அதற்கான அறிகுறிகள் தெரியத் துவங்கி விடும். ஆனால் எல்லாக் குழந்தைகளும் மூன்று வயதிற்குள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவராகக் கண்டறியப்படுவதில்லை. பெரும்பாலும் இதற்குக் காரணம், பெற்றோர்கள் இத்தகைய குறைபாடு தமது குழந்தைக்கு வரும் என்பதை நம்ப மறுப்பதும், சில மருத்துவர்கள் அசிரத்தையாக இருப்பதும்தான். ஆனால் இந்த நோய் எவ்வளவு சீக்கிரம் கண்டறியப்படுகிறதோ, எவ்வளவு சீக்கிரம் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை துவங்க முடிகிறதோ அந்த அளவுக்கு நல்லது என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒரு உண்மை. இவ்விஷயத்தில் பெற்றோர்களுக்கு ஒரு மிகப் பெரிய பலம் அவர்களது உள்ளுணர்வுதான். தங்களது குழந்தை பழகும் விதத்தில் ஏதோ ஒன்று பிசகாய் இருக்கிறது என்று தோன்றினால், அவர்களது சந்தேகம் தீரும் வரையில் மருத்துவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.

பல நோய்களைப் போல இந்த நோயும் எந்தக் குடும்பத்திலும், யாருடைய குழந்தைக்கும் வரலாம்.

பொதுவாக ஒரு வயதிற்குள் ஒரு குழந்தையிடம் இந்த அறிகுறிகளை அடையாளம் காண்பது கடினம்; மூன்று வயதிற்கு மேல்பட்டு இந்த அறிகுறிகள் திடீரெனத் தோன்றுவதும் அரிது. ஆகையால் ஒன்றிலிருந்து மூன்று வயதிற்குள் ஒரு குழந்தை எப்படி வளருகிறது என்பதே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.

இந்த வயதுகளுக்குள் இருக்கும் குழந்தைகளிடம் முக்கியமாக கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள் இவை:

1. கண் பாராமை - குழந்தையிடம் கொஞ்சும் போது அல்லது உறவாடும் போது கண்ணோடு கண் பார்த்துப் பேசாமல் வேறு எங்கோ பார்த்தல்

2. ஒரு வயதில் மழலைச் சத்தங்கள் செய்யாமை

3. எதிர்வினை உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருத்தல் - அதாவது, நாம் சிரித்தால், திருப்பிச் சிரிப்பது. கண்ணாமூச்சி விளையாடுவது, நம்மைப் போலவே பாவனை செய்வது போன்றவை.

4. பதினாறு மாதங்களுக்குள் ஒரு சொல் கூடச் சொல்லாமல் இருத்தல்

5. சுட்டிக் காட்டாமை - ஒரு குழந்தையின் சுட்டு விரல் ஒரு பிரமாதமான கருவி. மிகச் சீக்கிரமே அதை சாதாரணக் குழந்தைகள் உபயோகிக்கக் கற்றுக் கொண்டு விடும் (அது வேண்டும், இது வேண்டும் என்று). நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அது இயலாது.

6. இரண்டு வயதில் இரு வார்த்தை சொற்றொடர்கள் பேசாமலிருத்தல்.

7. மற்ற குழந்தைகளிடம் ஆர்வமின்மை.

8. திரும்பத் திரும்ப சில செய்கைகளைச் செய்த வண்ணம் இருத்தல் - கையை ஆட்டுதல், தட்டாமாலை சுற்றுதல் போன்றவை - குறிப்பாக இவற்றை தனிமையில் செய்ய விரும்புதல்.

இவற்றுள் எல்லா அறிகுறிகளும் இருக்க வேண்டுமென்பதில்லை, ஏதாவது ஒன்றிரண்டு மட்டும் இருந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் இவற்றில் பல சேர்ந்து இருக்கும் போது அது கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சந்தேகம் இருந்தால் இந்த நோய் உள்ளதா இல்லையா என்பதை குழந்தை மன நல மருத்துவரோ, ஒரு குழந்தைகள் நரம்பியல் நிபுணரோ ஊர்ஜிதம் செய்ய முடியும்.

'என் அத்தைப் பையனுக்கு இப்படித்தான், ரொம்ப பயந்தார்கள், ஆனால் கடைசியில் ஒண்ணுமே இல்லை, எல்லாம் சரியாகி விட்டது' போன்ற வார்த்தைகளெல்லாம் தற்காலிக மன சாந்திக்குத் தான் உதவும். இந்த நோய் தானாக குணமாகும் நோயல்ல. தீவிர சிகிச்சை தேவைப்படும் நோய். அபாய அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

(தொடரும்)

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger கிவியன் said...

மதியிறுக்கம் - நல்ல மொழிபெயர்ப்பு.
அதைவிட அதைப்பற்றி எழுத வந்திருக்கும் ஸ்ரீகாந்த்தின் முயற்சி பாராட்டுக்குரியது.

ஒரு சந்தேகம், இதனை ஒரு நோய் என்று கூறூவது சரிதானா? உடல்ஹீனம் அல்லது அங்கஹீனம் மாதிரி, மூளை வளர்ச்சியில் சில குறைகளால் ஏற்படுவதுதானே? சமூகத்தில் கண் பார்வையற்றவர், காது கேளாதவர் போன்றவர்களை எப்படி ஏற்றுக்கொள்கிரோமோ அது போன்று மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் உங்கள் தொடர் மிகவும் உபயோகமாக இருக்கும்.

இந்த கட்டுரையில் உபயோகமான சுட்டிகளையும், புத்தகங்களையும், இதனைப்பற்றிய வலைகுழுக்களையும் ஆங்காங்கே வழங்கினால் இதனை படிக்கும் வாசகர்கள் தங்கள் சுற்றத்தில் இந்த குறை உள்ள குழந்தைக்கு உதவக்கூடும்.

August 09, 2005 7:46 PM  
Blogger Srikanth Meenakshi said...

சுரேஷ், நன்றி.

இதை நோய் என்று சொல்வதற்கு குறிப்பான காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது - இது குணப்படுத்தக் கூடியது என்று நம்பப்படுவதே. பல குழந்தைகள் சீரடைந்திருக்கிறார்கள். மனிதனுடைய பலமெதிலே, நம்பிக்கையிலே :-)

கட்டுரையின் முடிவில் பல சுட்டிகள் கொடுக்கவுள்ளேன்.

August 09, 2005 9:18 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நல்ல பதிவு ஸீரிகாந்த்
படிக்க படிக்க சற்று பயமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
என்ன செய்ய? பல சமயம் நம் வாழ்க்கையின் அர்த்தம் புரியவில்லை.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

August 10, 2005 10:37 AM  

Post a Comment

<< Home