'அப்பிடிங்கிறதெல்லாம்...'
'நீங்கள் கேட்ட பாடல்' விஜய சாரதி செல்லும் இடங்களும், சொல்லும் தகவல்களும் சுவையானவை. ஆனால் அவர் பேசும் பாணி தாங்க முடியாக் கொடுமை. சிறிது நேரத்திற்கு முன் அவர் மன்னார் வளைகுடா பீச்சில் நின்று கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தார். காற்றைக் குத்தியவாறு, 'ஆடம்ஸ் பாலம், பாக் ஜலசந்தி, வங்காள விரிகுடா' என்று கஷ்டப்பட்டு விளக்கிக் கொண்டிருக்கையில், நடுவில் இப்படி ஒரு வாக்கியம்:
'இப்பொ பார்த்தீங்கன்னா, இந்தப் பகுதியில் கடல்ல ஆழம் கம்மி. அதனால, கப்பல் அப்பிடிங்கிறதெல்லாம்...'
Hold on, hold right there...'கப்பல் அப்பிடிங்கிறதெல்லாமா'? கப்பலுக்கு எதற்கு ஓய் ஒரு 'அப்பிடிங்கிறதெல்லாம்'? விட்டால் 'அப்பிடிங்கிறதெல்லாமு'க்கே ஒரு 'அப்பிடிங்கிறதெல்லாம்' போடுவீர் போலிருக்கே... சின்னப் பசங்களுக்கு இவரைக் கதை சொல்ல விட்டால், 'பாட்டி அப்பிடிங்கிறவங்க, வடை அப்பிடிங்கிறதெல்லாம் சுட்டுக்கிட்டிருந்தாங்க அப்பிடின்னும் சொல்லலாம்' என்பார் போலிருக்கிறது.
யாராவது விஜய சாரதியின் ஒக்கப்பிலேரியிலிருந்து 'அப்பிடிங்கற' வார்த்தையை அப்படியே எடுத்து விட்டால் ரொம்ப புண்ணியமாய்ப் போகும்!
மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
9 Comments:
//ஒக்கப்பிலேரியிலிருந்து..//
Hold on, hold right there...
Is it vocabulary?
இங்கிலீஷிலேயே எழுதியிருக்கலாம். திடீர்னு தமிழிலே படிச்சவுடனே ஏதோ கெட்ட வார்த்தை போலன்னு நெனச்சிட்டேன் சாரே!
ஸ்ரீகாந்த், கெடக்கறதல்லாம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மணையிலே வெய்யின்னானாம் ஒர்த்தன், அவன் கத தெரியுமா? இருக்கிற காம்பௌண்டர்லயே ( காம்பௌண்டர் இல்லியா... அப்ப அது போல ஏதோ ஒண்ணு ) விஜயசாரதி கொஞ்சம் பரவாயில்லையாட்டம்னு நெனைச்சுட்டு இருக்கேன்...இல்லியா? 99.99 சதவீதம் ஆங்கிலமும், 00.01 சதவீதம் தமிழும் கலந்து பேசற 'பொம்பிளேஸ்' ஐ எல்லாம், கபீம்குபாம் பண்ணிட்டு இங்க வாங்க :-) ( டைம் சரியில்லே, எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு சின்ன ஸ்மைலி)
Post nalla irukku --
athai vida.. Icarus in comment
Super!
மாயவரத்தான், :-) சின்ன வயசில் வத்தலான காகிதத்தில் அடித்த 'ஆங்கில ஒக்கப்பிலேரி' என்ற புத்தகத்தை 'படி படி' என்று அப்பா தலையாலடித்துக் கொள்வார். புத்தகத்தின் உள்ளேயிருந்து ஒரு வார்த்தை கூட மண்டையில் ஏறவில்லை, வெளியில் இருந்த இந்த ஒரு தங்கிலீஷ் வார்த்தை மட்டும் பச்சக் என்று ஒட்டிக் கொண்டு விட்டது, என்ன செய்ய?
இகாரஸ், உண்மை தான், விஜய சாரதி கொஞ்சம் தேவலைதான், ஆனால் எதற்கெடுத்தாலும் ஒரு 'அப்பிடின்னும் சொல்லலாம்'-ஆ? அவர் 'அப்பிடின்னு' சொன்னால், நான் இப்படித்தான் சொல்வேன் :-)
ஸ்ரீகாந்த்
நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்..
//ஒக்கப்பிலேரியிலிருந்து..//
இது தான் பஞ்ச்.. நன்றி
ஸீரிகாந்த்
நன்றாக சொன்னீர்கள்.
எனக்கும் சுத்தமாக விஜயசாரதியின் பேச்சு பிடிக்காது.
அதிலும் குறிப்பாக அதில் வரும் ஜோடிகளிடம் அவர் கேட்கும் கேள்விகள் மகா அபத்தம்.
விஜயசாரதிக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோணிஉள்ளது.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
நானும் ஒரு வாரம் முன்பு தான் இவரின் பேச்சை கேட்டுட்டு 'இப்படி இரைச்சலா, ஒரு modulationலே இல்லாம, ம்யூட் பட்டனை அமுக்க வைக்கிற மாதிரி பேசறாரே'ன்னு நினைச்சேன். அப்புறம் இந்த பின்னால் நடந்து கொண்டே பேசுவது என்னை மட்டும் தான் irritate செய்யறதா?
ஐகாரஸ் ப்ரகாஷ், நீங்க சொல்ற விஷயத்துக்கு தனி பதிவேல்லாம் ஜுஜுபி. தனி புத்தகமே போடணும். :-)
This comment has been removed by a blog administrator.
இந்த மாதிரி கேட்டு இருக்கிற கொஞ்ச நஞ்ச தமிழயையும் மறக்க கூடாதுன்னுதான் நான் சன் & மற்ற தொலைக்காட்சிகளை பார்க்கிறதில்லை.
Post a Comment
<< Home