ஒரு தீர்ப்பும் ஒரு தலையங்கமும்
ஹிந்து இன்று ஒரு நல்ல தலையங்கம் எழுதி இருக்கிறது.
டிசம்பர் 13, 2001 அன்று நிகழ்ந்த பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேல் முறையீட்டின் மீது உச்ச நீதி மன்றம் இரு நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. அதில்,
1. மொகமது அஃப்சல் என்பவரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டும்,
2. ஷௌகத் ஹுசேன் குரு என்பவரின் தூக்கு தண்டனை பத்து வருட சிறை தண்டனையாகக் குறைக்கப்பட்டும்,
3. ஜீலானி மற்றும் அஃப்சன் குரு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டும் இருந்தது.
இந்தத் தீர்ப்புகள் அனைத்தும் நியாயமானவை என்றே தோன்றுகின்றன. பிரச்னை அதுவல்ல. தீர்ப்பு வழங்கும் போது, ஜீலானியைப் பற்றி 'பொய் சொல்லியும் சந்தேகம் ஏற்படும் வகையிலும் இவர் பல காரியங்கள் செய்திருக்கிறார், இருப்பினும் போதிய ஆதாரங்கள் இல்லை' என்று நீதிபதி சொல்லியிருக்கிறார். ஒரு தீர்ப்பில் இப்படி எழுதுவது சரியல்ல என்று எனக்கு தீர்ப்பைப் படித்ததுமே தோன்றியது, ஹிந்துவின் தலையங்கமும் அதை நிச்சயம் செய்திருக்கிறது. ஆதாரங்கள் இருந்தால் தண்டனை, இல்லையென்றால் விடுதலை என்பதாக தீர்ப்பு அமைய வேண்டுமே ஒழிய, எம்.ஆர்.ராதா ஸ்டைலில், 'நீ ஏதோ ராங் பண்றே, மேன். உன்ன நான் வாட்ச் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கேன்' என்ற வகையில் அல்ல. செய்திகளில் வரும் விஷயங்களை வைத்துப் பார்த்தால் இந்த ஜீலானி ஒரு நிழலான ஆசாமி என்று தான் தோன்றுகிறது. ஆனால் ஒரு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அதைச் சொல்வது அழகல்ல.
நான் மரணதண்டனையை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பவன் அல்ல. டெக்ஸாஸ் மாநிலம் போலவோ, இந்தியக் கீழ்க் கோர்ட்டுகள் போலவோ சகட்டு மேனிக்கு அது வழங்கப்படுவதை கண்டிப்பாக எதிர்க்கிறேன். மிக அபூர்வமான வழக்குகளில், மிக மோசமான குற்றங்கள் புரிபவருக்கு, அது வழங்கப்படுவதை கண்டிப்பாக ஆதரிக்கிறேன். இந்த வழக்கின் நீதிபதி சொன்னது போல், சில சமயம் ஒரு சமுதாயத்தின் ஒட்டு மொத்த மனசாந்திக்கு இது தேவைப்படுகிறது ("The collective conscience of the society will be satisfied..") என்பது குரூரமாக இருந்தாலும், நடைமுறை உண்மை. பாராளுமன்றத்தில் பெரும் நாசம் உண்டாக்கத் திட்டமிட்டுத் தாக்கி, பல உயிர்களை பலி கொண்ட இந்தச் செயலுக்கு, நிரூபிக்கப்படும் விதத்தில் உடந்தையாக இருந்த அஃப்சலுக்கு இது பொருந்தும்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
0 Comments:
Post a Comment
<< Home