<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Tuesday, August 02, 2005

உதயகுமார் என்னும் சிந்தனைச் சிற்பி

முனைவர் எஸ்.பி.உதயகுமார் ஒரு வாசிக்கப்பட வேண்டிய கட்டுரையாளர். கல்வி, இதழியல், சமூகவியல், அரசியல், அறிவியல் எனப் பல துறைகள் கூடும் இடங்களில் ஆராய்ச்சி மற்றும் களப்பணிகள் செய்து வருபவர். அவரைப் பற்றி ஒரு சுருக்கமான முன்னுரையும், அவர் எழுதியுள்ள இரு கட்டுரைகள் குறித்து எழுதுவதும் இப்பதிவின் நோக்கம்.

1. உதயா கன்யாகுமரியைச் சேர்ந்தவர். நடு நாற்பதில் வயது.

2. மதுரைக் காமராஜில் இயற்பியல் பட்டம், கேரளாவில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம்; அமெரிக்க நோத்ர தாமில் சர்வதேச அமைதிக்கல்விப் பட்டம், ஹவாயில் அரசியல் கல்வியில் முனைவர் பட்டம்.

3. கல்வியில் புதுமையும் மாற்றங்களூம் வேண்டுமென்று சொல்வதோடு நில்லாது, கன்யாகுமரியில் இதன் பொருட்டு ஒரு பள்ளி நிறுவி நடத்துபவர்.

4. South Asian Community Centre for Education and Research (SACCER) Trust என்ற அமைப்பின் தலைவர்.

5. சுனாமி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர்.

6. இவரது புதிய புத்தகம் - 'Presenting' The Past : Anxious History And Ancient Future In Hindutva India - சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

7. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதில் நிகழும் மறைவான முறைகேடுளையும், அமைவதால் நிகழக் கூடும் பேரபாயங்கள் குறித்தும் எழுதி, போராடி வருபவர்.

இவரை சென்ற வருடம் வாஷிங்டன் வந்திருந்த போது சந்திதேன். எழுத்தில் தெரியும் கோபத்தையும் வேகத்தையும் எங்கே ஒளித்து வைத்திருக்கிறார் என்பது போன்ற மென்மையான சுபாவமும், அமைதியான குணமும் கொண்டவர்.

இவரது பல கட்டுரைகள் இந்தத் தளத்தில் கிடைக்கின்றன. அவற்றில் இரண்டு:

1. இட ஒதுக்கீடு பற்றி (இரு ஆண்டுகள் முன்பு ஹிந்துவில் வெளியானது): முதலில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இன்னமும் தேவைதான் என்று நிறுவி, பின்னர் தற்போதைய முறையில் உள்ள கோளாறுகளைப் பேசுகிறார். பிற்பட்ட வகுப்பினருள் பணக்காரர்களுக்கே பயன்படும் வகையில் இன்றைய முறை உள்ளது என்றும், உண்மையில் உதவி தேவைப்படுபவர்கள் பயன் பெறக்கூடிய புதிய முறை தேவை என்றும் தீர்க்கமாக வாதிடுகிறார். கட்டுரையின் முடிவில் ஒரு நூதனமான தீர்வையும் முன்வைக்கிறார். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு நூறு புள்ளி அமைப்பில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். நூறு புள்ளிகளில், 51 புள்ளிகள் மாணவனின் சாதியைப் பொறுத்தும் (தலித்திற்கு மிக அதிகமாகவும், முற்பட்டவர்களுக்கு குறைவாகவும்), மீதி 49 புள்ளிகள் பால், தங்குமிடம்(கிராமம், சிற்றூர், நகரம்), குடும்பக்கல்வி, குடும்பத்தில் ஊதிய நிலை, குடும்பச் சொத்து, குடும்பத்தில் வேலை பார்ப்பவர் எண்ணிக்கை, மற்றும் சொந்த வாழ்வில் பெருஞ்சோக நிகழ்வுகள் (Tragedies) ஆகியவற்றிற்கு தலா ஏழு என்ற விகிதத்திலும். வெறும் சாதியை மட்டும் கணக்கில் கொள்ளாத இம்முறை உண்மையான சமூக நீதிக்கு வழி வகுக்கும் என்றும், இந்த முறையை இந்தியா முழுவதிலும் கடைபிடிக்க முடியும் என்று நம்புகிறார்.

சுட்டி இங்கே

2. இரண்டாவது இந்தியப் பிரதமரின் சமீபத்திய அமெரிக்க விஜயம் குறித்த (கொஞ்சம் காட்டமான) கட்டுரை. அமெரிக்காவின் முக்கிய நோக்கம் இந்தியாவை சீனாவிற்கு எதிராக வளர்ப்பது என்பதால், இந்தியாவின் அணுமின் நிலையங்களில் தீவிரமான கண்காணிப்புகளுக்கு இடம் கொடுக்காது என்று நம்புகிறார்.

சுட்டி இங்கே.

இந்தியாவிலும், தமிழகத்திலும், கட்சி சார்பின்றி, அறிவியல் முறைப்படி, புள்ளி விவரங்கள் ஆராய்ந்து செயல்படும் சமுகவியல் ஆய்வாளர்கள் அவசியம் தேவை. அதிலும் நன்கு எழுதும் திறன் மிக்கவர்கள் மிக அவசியம் தேவை. உதயகுமார் கருத்துக்களோடு நாம் உடன்படலாம், சில சமயம் வேறுபடலாம். ஆனால் அவரது நேர்மை, முனைப்பு, நன்னோக்கு, உழைப்பு ஆகியவை அவரது எழுத்துக்களை அவசியம் வாசிக்க வேண்டியவை ஆக்குகின்றன.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger PKS said...

Srikanth,

Thanks for this post.

Regards, PK Sivakumar

August 02, 2005 6:02 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

ஸ்ரீகாந்த்,

உதயக்குமார் பற்றிய தேவையான பதிவு.

நன்றி - சொ. சங்கரபாண்டி

August 06, 2005 10:21 PM  

Post a Comment

<< Home