<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Friday, July 22, 2005

சிவாஜியின் 'ரயில்வே கழிப்பறை'

எனது தர்ம பத்தினியின் பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். எனது மாமனார் ஸ்ரீமான் தண்டபாணி அவர்கள் நல்லவர், வல்லவர்; இனிமையாகப் பழகி, நகைச்சுவை உணர்வோடு, தனது வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாகச் அவர் சொல்லச் சொல்ல, கேட்பவர்களுக்கு அலுக்கவே அலுக்காது.

எனது மாமனார் இந்த வலைப்பதிவுகளை அடிக்கடி வாசிப்பவர். ;-)

அவர் விவரித்த ஒரு சுவையான சம்பவத்தை உங்களோடு (சுருக்கமாக) பகிர்ந்து கொள்கிறேன். தான் பெற்ற...etc. etc..

1971-ஆம் வருடம். ஸ்ரீ விக்னேஸ்வரா கலை மன்றத்தில் சிவாஜி கணேசன் துணைத் தலைவர். ஒரு நாள் மன்ற நிர்வாகிகளோடு (மாமனாரும் இதில்) சகஜமாக உரையாடிக் கொண்டிருக்கையில், ஒருவர் (மாமனார் இல்லை) 'நீங்கள் ஏன் எப்போதும் ஓவர் ஆக்ட் பண்ணுகிறீர்கள்?' என்று கேட்டு விட்டாராம். அதற்கு சிவாஜி பதில் (பாசமலர் ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்):

"நீங்களெல்லாம் நிறைய படிச்சவங்க, ஆங்கிலப் படங்கள் எல்லாம் பார்த்திருப்பீங்க, ஆனா தமிழ் நாட்டில எத்தனையோ பாமர ஜனங்க இருக்காங்க, என்னோட நடிப்பு அவங்களையும் போய்ச் சேரணுமே...

நீங்க ரயில்வே கக்கூஸ் பாத்திருக்கீங்களா? 'ஆண்கள்', 'பெண்கள்' அப்டீன்னு போர்டு போட்டிருக்கும். ஆனா கூடவே ஒரு ஆண் படமும், ஒரு பெண் படமும் வரைஞ்சிருப்பாங்க...ஏன்? அதான் ஒரு தடவை எழுதிட்டாங்களே...அவங்க ஒவர் ரைட்டிங் பண்ணறாங்களா? இல்ல, படிப்பறிவில்லாத பாமர ஜனங்களுக்கும் புரியணும்-னுட்டுத்தான்.

நான் ஒரு ஜட்ஜாவோ, இன்ஸ்பெக்டராவோ வந்தா அதை மிகைப்படுத்தி காண்பிச்சாத்தான் அதை நடிப்புன்னு அவங்களால ஏத்துக்கிட்டு ரசிக்க முடியும். நீங்க சொல்ற ஓவர் ஆக்டிங் தான் அவங்களுக்கு ஆக்டிங்", என்றாராம்.

இதில் மாமனாருக்கு முக்கிய சந்தோஷம் தன்னையும், தனது நண்பர்களையும் 'நிறைய படிச்சவங்க' என்று சிவாஜி அங்கீகரித்தது தான். :-)

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger dondu(#11168674346665545885) said...

சிவாஜி சுஜாதா நடித்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தலைப்பு நினைவில் இல்லை. இதில் சிவாஜி சட்டத்திடமிருந்து ஓடி ஒளிபவர். ஒரு ரயில்வே waiting room-ல் ஒரு முழு இரவும் ஒளிந்திருக்க வேண்டிய நிலை. அவர் படுத்திருக்கும் பெஞ்ச் டாயிலெட்டுக்கு வெளியில். இரவு முழுதும் மனிதர் மூக்கை மூடிக்கொண்டுதான் படுத்திருப்பார். ரயில்வே டாயிலெட்டை அந்த லட்சணத்தில் maintain செய்கிறார்கள் என்பதை காண்பிப்பார்.

July 23, 2005 1:17 AM  
Blogger Jayaprakash Sampath said...

//சிவாஜி சுஜாதா நடித்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தலைப்பு நினைவில் இல்லை. இதில் சிவாஜி சட்டத்திடமிருந்து ஓடி ஒளிபவர்.//

அண்ணன் ஒரு கோயில்

July 23, 2005 1:25 AM  
Blogger Machi said...

""எனது மாமனார் இந்த வலைப்பதிவுகளை அடிக்கடி வாசிப்பவர். ;-)""

எனது மாமனார் ஸ்ரீமான் தண்டபாணி அவர்கள் நல்லவர், வல்லவர்; --
புரிகிறது உங்களின் இந்த வரிகள். :-))

July 28, 2005 11:28 PM  

Post a Comment

<< Home