<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Friday, April 14, 2006

லாஸ் வேகஸ்: பயணக் குறிப்புகள்


  • லாஸ் வேகஸ் விமான நிலையத்தில் காரைப் பொறுக்கிக் கொண்டு வெளியே வந்தது சனி இரவு பதினொரு மணிக்கு. விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் வரை தூரம் ஒரு மைல். ஹோட்டல் சென்றடந்தபோது மணி - நள்ளிரவு தாண்டி பனிரெண்டரை. சாதாரண நகரங்களில் போக்குவரத்து நெரிசல் நேரம் வாரநாட்களில் காலையும் மாலையும். வேகஸில் நெரிசல் நேரம் சனிக்கிழமை நள்ளிரவு. Welcome to Las Vegas.
  • தனது பகட்டான போலித்தனத்தை கொஞ்சமும் வெட்கமில்லாமல், ஆரவாரத்தோடு கொண்டாடும் நகரம் இது. போலி பாரிஸ், போலி வெனிஸ், போலி ரோம், போலி கைரோ என்று ஓவ்வொரு ஊரையும் சாராம்சப்படுத்தி சின்னக் குடுவையில் அடைத்து பத்தொன்பது ரூபாய் தொண்ணுற்றைந்து காசுகளுக்கு விற்கிறார்கள். This is an exact model of the Eiffel tower, this is an exact model of the square in Venice, this is an exact model of King Tut's chamber... etc. etc...
  • {begin obligatory leftist interlude} Pedicab என்று ரிக் ஷா போல ஒன்று வைத்திருந்தார்கள். சவாரிக்கு நான்கு ரூபாய். ஒரு வயோதிக சைனீஸ் தம்பதியை வைத்து ஒரு வெள்ளைக்கார இளைஞர் அதை ஓட்டிச் சென்றதைப் பார்க்க சுவாரசியமாக இருந்தது. {end oli}
  • லாஸ் வேகஸ் பயணக்கதைச் சுருக்கம் (1): காரில் ஏறு; வண்டியை ஓட்டு; பார்க்கிங் வேட்டையாடு; இறங்கு; நட; நட; நட; கசீனோவுக்குள் நுழை; நட; நட; நட; "வாவ்!"; நட; நட; நட; வெளியேறு; நட; நட; நட; Repeat.
  • லாஸ் வேகஸ் பயணக்கதைச் சுருக்கம் (2): -$45.50 :-(
  • ஹூவர் அணையிலிருந்து க்ராண்ட் கான்யன் போகும் வழியில் ஒன்றுமேயில்லை என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். மூன்று மரங்களும், சில பாறைகளும், நிறைய புழுதியும் இருந்ததை இரண்டு கண்களால் பார்த்தேன்.
  • கிராண்ட் கான்யனுக்குக் காமிரா எடுத்துச் செல்வது வெட்டி வேலை: அந்த இடத்தின் ஆழத்தையும், பிரம்மாண்டத்தையும், சாயந்திர வெய்யில் அந்தச் செம்பாறைகள் மீது தீட்டும் வெளிச்ச ஓவியங்களையும் எந்த ஒரு புகைப்படத்திலும் சிறைபிடிக்க முடியாது.
  • நாங்கள் பார்த்தவற்றுள்:

    நன்கு வடிவமைக்கப்பட்ட கசீனோக்கள்: பெல்லாஜியோ, லக்ஸார், வெனீஷியன்
    சொதப்பல் கசீனோக்கள்: ட்ரெஷர் ஐலண்ட், அல்லாதீன்
    ரசித்த இடங்கள்: பெல்லாஜியோ நீர்ச்சுனைகள், தோட்டம், வெனீஷியன் படகு சவாரி, மிராஜ் மிருகங்கள்
    வேகஸில் ஹைலைட்: பெல்லாஜியோ நீர்ச்சுனை மற்றும் தோட்டம்
    பயணத்தின் ஹைலைட்: கிராண்ட் கேன்யன்
  • இன்று காலை முதுகில் முன்பு இருந்தறியாத இடங்களில் எல்லாம் வலியோடு கண் விழித்த போது பயணத்துக்கு முன்பு நண்பரோடு நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது:

    "வேகஸ்-ல என்ன பண்ணப் போறீங்க?"

    "வெகேஷன் தானே, நல்லா ரிலாக்ஸ் பண்ணப் போறோம்..."

    (அர்த்தபுஷ்டியாய்ச் சிரித்துக் கொண்டு) "அப்டீன்னா பீச்சுக்குப் போங்க...வேகஸ்ல ரிலாக்ஸெல்லாம் பண்ண முடியாது..."

    உத்திரவாதமாய் சத்திய வார்த்தை.



மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

8 Comments:

Blogger கூத்தாடி said...

அது சரி எவ்வுளவு விட்டீங்க ?
என்க்கு லாஸ்வெகாஸ் பிடித்த நகரம். கேசினோ வில் விளையாடி தூங்கி விட்டு அடுத்த நாள் மத்தியானம் எந்திருச்சு திரும்பவும் விளையாட ஆரம்ப்பிப்போம் ..once in a while it is ok to gamble like that .ரிலாக்ஸ் பண்ண அது சரியான இடம் இல்லை. அது ஒரு பாவநகரம் ..என்னைப் போன்ற பாவிகளுக்கு பிடித்த நகரம் ..
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

April 14, 2006 3:05 PM  
Blogger பரி (Pari) said...

வெறும் $45.50?
நான் மூஊஊஊஊனு(3) டாலர் விட்டிருக்கேனாக்கும் :)

நடையா நடந்தே கால் தேய்ஞ்சிடும் :(

April 14, 2006 3:28 PM  
Blogger Karthik Jayanth said...

//மூன்று மரங்களும், சில பாறைகளும், நிறைய புழுதியும்

என்னது ஒரு வருசத்துல ஒரு மரம் கண்டிபா வளராது. நான் எப்படி அந்த 3 வது மரத்தை பார்க்காமல் விட்டேன்.

//வெகேஷன் தானே, நல்லா ரிலாக்ஸ் பண்ணப் போறோம்..."

தவறான இடம் என்பது எனது எண்ணம்.. இந்த இடம் வாழ்வின் வசந்த காலத்தில் போக வேண்டிய இடம். அலுக்க அலுக்க கஸினோ, பார் and what not place..

//கிராண்ட் கான்யனுக்குக்...

சில விஷயங்களை நேர்ல அனுபவிக்கனும்.. என்ன நான் சொல்லுறது..

April 14, 2006 3:39 PM  
Blogger வெளிகண்ட நாதர் said...

'ஷோ' ஏதும் பார்த்தீங்களா?
இனொன்னு தெரியுமா, இந்த கேசினோல்ல என்ன விளையாண்டும் காசு ஒன்னும் தேறபோறதில்லை. இதில ஒரு சோகம் என்னான்னா, இருக்கிற காசை எல்லாம் உட்டுட்டு போதும்டா வீட்டுக்கு போலாமுன்னாலும் எழவு விடாது தெரியமா? அப்பதான் ஒரு 20, 30 கிரிடிட்ஸ் வரும், திருப்பி அதை வச்சு கட்டி விளையாண்டு நீண்டுக்கிட்டே போவும். இதுதான் கொடுமை!

April 14, 2006 4:24 PM  
Blogger Srikanth Meenakshi said...

கூத்தாடி, பதிவில் சொன்னது போல 45.50 - அதிகமில்லை ஜெண்டில்மென்...

கார்த்திக், வாழ்வின் வசந்த காலமா? அது வந்ததும் தெரியல, போனதும் தெரியல... :-)

வெ.க.நா: ஷோ எங்கே சார்...பரி சொன்ன மாதிரி நடந்தே கால் தேய்ஞ்சு சாயந்திரம் கட்டைய சாய்த்தால்ப் போதும் என்று இருந்தது...

April 14, 2006 9:18 PM  
Blogger Boston Bala said...

---"அப்டீன்னா பீச்சுக்குப் போங்க...வேகஸ்ல ரிலாக்ஸெல்லாம் பண்ண முடியாது..."----

அல்லது கிராண்ட் கான்யான் மட்டும் நாலு நாள் டேரா போடலாம்.புகைப்படங்கள் எப்போ வலையேற்றம் காணப்படுகிறது?(உங்க ஊருக்கு 'வே.வி.' வெ.தி.யை தொட்டு விட்டதா?

April 15, 2006 12:12 PM  
Blogger Srikanth Meenakshi said...

கமல், வெள்ளைப் புலி பார்த்தேன்...actually, I had assumed it was a sub-species of tiger, but a note on the display said that these were regular tigers which lack a pigmentation for skin color, somehow this took the fascination out...

ஸ்ட் ராடோஸ்பியர் போக நேரமில்லை...

பாலா, வே.வி ரிலீஸ் ஆகி விட்டதா? அதுவே எனக்குத் தெரியாது...எங்கள் ஊரில் இன்னமும் இல்லை... how about boston?

April 15, 2006 4:15 PM  
Blogger Srikanth Meenakshi said...

Here are some photos:

http://www.flickr.com/photos/srikanthmeenakshi/sets/72057594107885326/

April 15, 2006 4:51 PM  

Post a Comment

<< Home