<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Sunday, March 26, 2006

தில்லி சலோ!

March 28, 2006 Update: தில்லி சென்றடைந்த இவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நிகழ்ந்ததாய்ச் செய்திகள் சொல்கின்றன - மேலும் விவரங்கள், படங்கள்.

போபால் என்ற வார்த்தையைப் படித்தாலே, சரி ஏதோ பழங்கதை என்று தான் நேற்று வரை நினைத்திருப்பேன். இன்று நான் கலந்து கொண்ட ஒரு தன்னார்வ தொண்டமைப்பின் சந்திப்பில், ஒரு இளைஞரின் பேச்சின் மூலம் சில சமீபத்திய செய்திகள் தெரிய வந்தன. சுருக்கமாகச் சொல்கிறேன்.

இன்று நடப்பது:

போபால் விபத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் சுமார் எழுபது பேர், போபாலிலிருந்து புது தில்லி வரை நடை பயணம் (787 கிலோமீட்டர்) மேற்கொண்டுள்ளனர். தற்போது தில்லியின் மிகச் சமீபத்தில் இருக்கும் இவர்கள், நீங்கள் இதைப் படிக்கும் தருணத்தில் நகரத்தைச் சென்றடைந்திருப்பார்கள்.

தில்லியில் பிரதமருடன் ஒரு நேர்காணலைக் கோரி இருக்கிறார்கள். நேர்காணல் கிடைக்காவிட்டால், கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் தீர்மானித்திருக்கிறார்கள்.

இவர்கள் எதற்காக நடக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுமுன் சில விஷயங்கள்.



இவை உண்மைகள்:

  • ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த போபால் விபத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலானவர்கள் பலத்த காயமுற்றனர். அவர்களுள் சுமார் இருபதாயிரம் பேர் அக்காயங்களினால் பின்பு உயிரிழந்தனர்.
  • நச்சு வாயுவினால் மாசடைந்த சுற்றுப்புறம், நீர்நிலைகள் ஆகியவை இன்று வரை சுத்திகரிக்கப்படவில்லை. இன்று வரை அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் பல பிறவிக் கோளாறுகளுடன் பிறக்கின்றன. அங்கு வாழும் மக்களை பல வினோதமான உடல் உபாதைகள் பீடிக்கின்றன.
  • டவ் கெமிக்கல் கம்பெனி அளித்த நிவாரணத் தொகை - பல, பல வருடங்கள் போராடிப் பெற்றது - உயிரிழப்பிற்கு $1170, பலத்த காயத்திற்கு $520. ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு இது பிச்சைக் காசு என்பது மட்டுமல்ல, இது பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித நிவாரணத்தையும் பெற்றுத் தராத ஒரு சிறிய தொகை.


நடைபயணத்தின் முக்கிய கோரிக்கைகள்:

1. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளின் உடல்நலன் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு நீண்ட நாள் மருத்துவ வசதி தர வேண்டும்.
2. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று வரை வழங்கப்படாத சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
3. வாரன் ஆண்டர்சன் மற்றும் யூனியன் கார்பைடு நிர்வாகிகள் சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும்.
4. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் சுற்றுப்புறச் சூழல் அறிவியற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப் பட வேண்டும்.
5. டவ் நிறுவனம் தனது கடமையை நிறைவேற்றும் வரை இந்திய அரசாங்கம் அந்நிறுவனத்துடன் வர்த்தகம் செய்வதை நிறுத்த வேண்டும்.
6. டிசம்பர் மூன்றாம் தேதி தேசிய தொழிற்சாலை விபத்துக்களுக்கான நினைவு தினமாக அனுசரிக்கப் பட வேண்டும்.


நாம் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும்?

ஒளிமயமாக வளரும் இந்தியாவினால் சுலபமாக மறக்கப்பட்ட இவர்களுக்குக் குரல் கொடுப்பது நமது தார்மீகக் கடமை என்பது மட்டுமல்ல காரணம்.

உலகமயமாகி வரும் வர்த்தகத்தின் ஆனந்த ஆலிங்கனத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கு போபால் என்றென்றும் நினைவில் இருக்க வேண்டும். இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்ததை விட, போபால் விபத்து விடுக்கும் செய்திகள் இன்று இந்தியாவிற்கு அதிகம் தேவைப்படுகின்றன. நதிநீர் விற்பனை, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துப் பரிசோதனைகள் என்று பல விஷயங்களில் அசிரத்தையாகவோ, அயோக்கியத்தனமாகவோ இந்திய மக்கள் நலனை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காவு கொடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு போபால் மறுபடி மறுபடி நினைவுபடுத்தப்பட வேண்டும்.

அந்த விதத்தில் இன்று நடைபயணம் மேற்கொண்டிருக்கும் மக்கள் அவர்களுக்காக நடக்கிறார்கள் என்று சொல்வதை விட நமக்காக நடக்கிறார்கள் என்று சொல்வதே பொருந்தும். நமக்காகப் போராடும் அவர்களுக்கு வெறுமனே ஆதரவுக் குரல் மட்டுமாவது கொடுப்பது நமது கடமை.


என்ன செய்ய வேண்டும்?

1. ஒன்று மட்டும் செய்வீர்களானால், இந்தத்தளம் சென்று ஒரு ஃபேக்ஸை அனுப்புங்கள்.
2. இரண்டு காரியங்கள் செய்ய முடிந்தால், இந்த பெட்டிஷனிலும் கையெழுத்துப் போடலாம்.
3. இந்தப் பட்டியலில் இருக்கும் மேலதிக செயல்களும் செய்யலாம்.
4. நடை பயணம் பற்றிய தற்போதைய நிலவரத்திற்கு இங்கு செல்லவும்.
5. மேலும் விவரங்களுக்கு.


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

8 Comments:

Blogger SnackDragon said...

Thanks!!. Sent Fax and Signed the petition.

March 26, 2006 11:46 AM  
Blogger Srikanth Meenakshi said...

Thanks, Karthik!

March 26, 2006 11:52 AM  
Blogger குசும்பன் said...

Info was very useful. Signed the petition today. Will send the fax tomorrow.

March 26, 2006 12:08 PM  
Blogger பத்மா அர்விந்த் said...

Thanks Srikanth
I will fax it tomorrow. Sign the petitiona s well. I will make a copy of this distribute to school of public health who are very interested in getting justice to the people who are injured.

March 26, 2006 1:56 PM  
Blogger Srikanth Meenakshi said...

Kusumban, தேன்துளி, நன்றிகள்...

தேன் துளி, உங்கள் மேலதிக முயற்சிகளுக்கு இன்னமும் நன்றி.

March 26, 2006 5:25 PM  
Blogger துளசி கோபால் said...

கையெழுத்தும் போட்டாச்சு, ஃபேக்ஸ் அனுப்பியாச்சு. நண்பர்களுக்கு விஷயத்தை அனுப்பிவச்சாச்சு,
அப்படியே உங்களுக்கு ஒரு + குத்தும் விட்டாச்சு.

March 26, 2006 8:19 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

சுட்டிகளூக்கு நன்றி ஸ்ரீகாந்த்,

சொ. சங்கரபாண்டி

March 27, 2006 11:41 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

நல்ல பதிவு.
கால் தடுக்கி விழுந்தவனுக்கெல்லாம் காசைவாரிக் கொடுக்கும் அமெரிக்க கம்பெனிகள் இந்தியர்களை செல்லாக்காசாய் மதிப்பது எதிர்க்கப்படவேண்டியது.

March 28, 2006 4:24 PM  

Post a Comment

<< Home