<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Sunday, March 26, 2006

சண்டே போஸ்ட் - 7

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:

  1. நோம் சாம்ஸ்கியுடன் உரையாடல்: இது இன்றைய போஸ்டில் வெளியானது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன் வெள்ளியன்று வெளியானது. போஸ்டின் வலைத்தளத்தில் தனித்துவமான ஒரு பகுதி, அதில் அன்றாடம் நடத்தப்படும் உரையாடல்கள். பொதுவாக அப்பத்திரிக்கையின் நிருபர்களோடு அவர்கள் எழுதிய கட்டுரைகளைப் பற்றிய விவாதங்களாக நிகழும் இவ்வுரையாடல்கள், பத்திரிக்கையின் செயல்பாடுகள், நிருபர்களின் அணுகுமுறைகள் ஆகியவற்றை வாசகர்களுக்கும், வாசகர்களின் பார்வைகளை நிருபர்களுக்கும் கொண்டு செல்ல உதவுகின்றன. வேறு எந்த பத்திரிக்கையும் இதை இவ்வளவு தீவிரமாகவும், பரந்த அளவிலும் செய்கிறதா என்று தெரியவில்லை.

    நிற்க. பத்திரிக்கை நிருபர்களோடு மட்டும் இவ்வுரையாடல்கள் நிகழ்த்தப்படுவதில்லை. சிந்தனையாளர்கள், சமீப செய்திகளில் இருப்பவர்கள், தொழில் முனைவர்கள் எனப் பலரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். பல வருடங்களுக்கு முன் கூகிளின் ஆரம்ப காலத்தில் லேரி பேஜ் வந்து PageRank தொழில் நுட்பத்தை விளக்கிக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது.

    அந்த வரிசையில் வெள்ளியன்று சாம்ஸ்கி வந்து உரையாடி இருக்கிறார். சாம்ஸ்கி அமெரிக்கக் கருத்தியல் வட்டங்களின் விளிம்பு நிலையில் இருப்பதாகக் கருதப்படுவது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை அவர் சில சமயம் கண்மூடித்தனமாக எதிர்ப்பதாகத் தோன்றினாலும், காலம் அவர் சொல்வதில் இருக்கும் நியாயங்களை நிரூபித்திருப்பதாகவே தோன்றுகிறது. உரையாடலிலிருந்து ஒரு கேள்வி:

    Arlington, Va.: Why do you think the US went to war against Iraq?

    Noam Chomsky: Iraq has the second largest oil reserves in the world, it is right in the midst of the major energy reserves in the world. Its been a primary goal of US policy since World War II (like Britain before it) to control what the State Department called "a stupendous source of strategic power" and one of the greatest material prizes in history. Establishing a client state in Iraq would significantly enhance that strategic power, a matter of great significance for the future. As Zbigniew Brzezinski observed, it would provide the US with "critical leverage" of its European and Asian rivals, a conception with roots in early post-war planning. These are substantial reasons for aggression -- not unlike those of the British when they invaded and occupied Iraq over 80 years earlier, at the dawn of the oil age.

  2. பாரிஸ் எரிகிறதா?: தற்போது பாரிஸ் நகரத்தில் நடக்கும் கலவரங்கள் சில மாதங்களுக்கு முன் புறநகர்ப் பகுதிகளில் நடந்த கலவரங்களின் எதிர்வினை என்கிறார் கட்டுரையாசிரியர். முன்பு நடந்தது வேலை வாய்ப்புகள் கோரும் போராட்டம். அதற்கு வழிவகுக்கும் வகையில் ஃப்ரான்சு அரசாங்கம் தொழிற்சட்டங்களைத் திருத்தப் போக, அத்திருத்தங்கள் வேலையிலிருப்போரைக் கலவரப்படுத்தியுள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் அரசாங்கத்தின் உறுதியின்மை என்கிறார். கட்டுரையிலிருந்து:

    "This is the second time in four months that France has been seized with violent protests. And in an important sense, these are counter-riots, since the goals of the privileged students conflict with those of the suburban rioters who took to the streets last November. The message of the suburban rioters: Things must change. The message of the students: Things must stay the same. In other words: Screw the immigrants."

  3. இணையத்தில் தீவிரவாதம்:இணையத்தின் அப்பாவித் தளங்களைக் குத்திக்குதறி ரணகளமாக்கிக் கொண்டிருக்கும் தீவிரவாதக் கொந்தர்களில் ஒருவனை ப்ரிட்டிஷ் அரசாங்கம் சமீபத்தில் கைது செய்தது. இர்ஹாபி 007 என்ற பெயரில் அவன் எப்படிச் செயல்பட்டான், என்னென்ன செய்தான் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இப்படி முடிகிறது:

    "But Irhabi's absence from the Internet may not be as noticeable as many hope. Indeed, the hacker had anticipated his own disappearance. In the months beforehand, Irhabi released his will on the Internet. In it, he provided links to help visitors with their own Internet security and hacking skills in the event of his absence -- a rubric for jihadists seeking the means to continue to serve their nefarious ends. Irhabi may have been caught, but his online legacy may be the creation of many thousands of 007s."

  4. பிரிட்டிஷ் ராஜ்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தினர் இந்தியாவில் எப்படி செயல்பட்டனர் என்பதைப் பற்றி வெளி வந்திருக்கும் ஒரு புதிய புத்தகத்தின் மதிப்பீடு. எழுதியிருப்பவர் சஷி தரூர்:

    "The Ruling Caste paints an arresting and richly detailed portrait of how the British ruled 19th-century India -- with unshakeable self-confidence buttressed by protocol, alcohol and a lot of gall. Stalin found it "ridiculous" that "a few hundred Englishmen should dominate India." Gilmour's book helps explain how they pulled it off."


  5. காலங்களில் இது வசந்தம்: வசந்தக் காலம் வருமோ என்று ஏங்கிக் கொண்டிருந்த வாஷிங்டன் இந்த வாரம் வா வா வசந்தமே என்று பாடத்துவங்கியிருப்பதற்குக் காரணம் வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடிக் கொண்டிருக்கும் செர்ரிப்பூக்கள். பொடோமக்கின் வசந்தக்கால நதியலைகளின் அருகே இந்த வாசமில்லா மலர்கள் வசந்ததைத் தேடி வரவேற்றுக் கொண்டிருக்கின்றன.



மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

0 Comments:

Post a Comment

<< Home