<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Tuesday, January 17, 2006

ஹிந்துவின் 'வாசக ஆசிரியர்'

சில நாட்களுக்கும் முன்பு ஹிந்து தனது நாளிதழுக்கு ஒரு 'வாசக ஆசிரியரை' நியமித்திருப்பதாக அறிவித்தது. இந்தியாவில் இத்தகைய ஒரு பொறுப்பை ஏற்படுத்தியிருக்கும் முதல் பத்திரிக்கை ஹிந்துவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பல மேற்கத்திய பத்திரிக்கைகளில் மக்கள் ஆசிரியர் என்று ஒருவர் இருப்பது பல வருடங்களாக இருந்து வருவது. இதற்கு விதிவிலக்காக இருந்த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் சில வருடங்களுக்கு முன்பு (பல சிக்கல்களில் மாட்டிக் கொண்ட பிறகு) இத்தகைய ஒரு பதவியை உருவாக்கியது. இப்பதவியை வாஷிங்டன் போஸ்டில் "Ombudsman" என்றும், நி.டைம்ஸில் "Public Editor" என்றும் அழைக்கிறார்கள். ஹிந்துவில் இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிக்கையைப் பின்பற்றி, "Reader's editor" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இப்பதவியை வகிப்பவரது முக்கியக் கடமை அப்பத்திரிக்கையின் மனசாட்சியாக செயல்படுவது ஆகும். பத்திரிக்கையின் ஒழுங்கு, செய்திகளின் பாரபட்சமின்மை, தலையங்கங்களின் அறிவு நேர்மை பற்றிய வாசகர்களின் கேள்விகள், குறைகள் ஆகியவற்றிலிருந்து முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு பத்திரிக்கையின் நிர்வாகத்திடமிருந்து விடைகள் பெறுவது அவரது முதல் வேலை. பொதுவாக இப்பதவியை வகிப்பவர்கள் மூத்த பத்திரிக்கையாளர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அப்பத்திரிக்கையில் வாரம் ஒரு முறையோ, இருவாரங்களுக்கு ஒரு முறையோ ஆசிரியர் பக்கத்திற்கு அருகில் இடம் ஒதுக்கப்படும். அந்த இடத்தில் அவர்கள் எழுதுவதற்கு முழுச் சுதந்திரம் வழங்கப்படும்.

இந்த அமைப்பு முறையாக செயல்படும் போது, பத்திரிக்கையின் நம்பகத்தன்மை கூடுகிறது. வாசகர்களுக்கு பத்திரிக்கையில் தமக்கும் ஒரு உண்மையான குரல் இருப்பதாகத் தோன்றுவதனால், பத்திரிக்கையோடு நடக்கும் உரையாடல்களில் நம்பிக்கை பிறக்கிறது. பத்திரிக்கை ஆசிரியர்களுக்குத் தாம் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணம் அகல்கிறது/குறைகிறது.

ஆயினும், இந்த அமைப்பு முறையாக செயல்படுவதற்கு இரண்டு விஷயங்கள் தேவை:

1. இத்தகைய ஆசிரியராக நியமிக்கப்படுபவரின் சாய்மானமின்மை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.

2. இந்த ஆசிரியரோடு பத்திரிக்கை நிர்வாகமும் ஆசிரியக்குழுவும் ஒத்துழைக்க வேண்டும். அதாவது வாசக ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையான பதில்களும் விளக்கங்களும் தர முயல வேண்டும். இவர் பாட்டுக்குக் கேட்டுக் கொண்டே இருக்க, அவர்கள் பதில் சொல்லாமலோ, அல்லது மழுப்பல் பதில்களாகச் சொல்லிக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை. உதாரணமாக, நியூ யார்க் டைம்ஸ் வாசக ஆசிரியர், சமீபத்தில் தமது கேள்விகளுக்கு ஆசிரியக் குழு பதில் சொல்வதில்லை என்று எழுதியிருக்கிறார்:

For the first time since I became public editor, the executive editor and the publisher have declined to respond to my requests for information about news-related decision-making. My queries concerned the timing of the exclusive Dec. 16 article about President Bush's secret decision in the months after 9/11 to authorize the warrantless eavesdropping on Americans in the United States.

I e-mailed a list of 28 questions to Bill Keller, the executive editor, on Dec. 19, three days after the article appeared. He promptly declined to respond to them. I then sent the same questions to Arthur Sulzberger Jr., the publisher, who also declined to respond. They held out no hope for a fuller explanation in the future.


ஹிந்துவைப் பொறுத்த வரை, இந்த இரண்டாவது விஷயத்தில் அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் போகப்போகத் தான் பார்க்க வேண்டும். ஆயினும் முதல் விஷயத்தைப் (சாய்மானமின்மை) பொறுத்த வரை இப்பொழுதே சில கேள்விகள் உள்ளன. அவர்கள் வாசக ஆசிரியராக தேர்ந்தெடுத்திருப்பது யாரையென்று பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாக இருக்கிறது.

பொதுவாக இத்தகைய நியமனங்களுக்கு, ஒரு பத்திரிக்கையின் பாரம்பரியத்துக்கு வெளியிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பதே பொருத்தமானதாக இருக்கும். உதாரணமாக, நி.டைம்ஸின் வாசக ஆசிரியர் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஆசிரியராக இருந்தவர். வால் ஸ்ட்ரீட்டுக்கும் டைம்ஸுக்கும் கருத்தளவில் கொஞ்சமும் ஒற்றுமை கிடையாது. வாஷிங்டன் போஸ்டின் Ombudsmanம் அப்பத்திரிக்கையோடு சம்பந்தப்பட்டவரில்லை. ஹிந்து தனது ஆதர்சமாகக் கொண்டிருக்கும் கார்டியன் பத்திரிக்கையின் இயன் மேய்ஸும் அப்பத்திரிக்கையில் இருந்தவரில்லை. ஆனால், ஹிந்துவின் வாசக ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் கே.நாராயணன் ஹிந்துவில் காலம் காலமாக (Pun unintended :-) ) பணியாற்றியவர்:

Mr. Narayanan, 73, joined The Hindu as a Kasturi Ranga scholar in 1955, became Sub-Editor in 1956, Chief Sub-Editor in 1964, Assistant Editor in 1975, and News Editor in 1978. Between 1984 and 1991, he oversaw the news operations of both The Hindu and Frontline. He became Associate Editor, Frontline in 1991 and retired in 1996. From September 1996, he has been Editorial Consultant to Frontline, and from July 2003, Senior Editorial Consultant to both The Hindu and Frontline.


ஆதலால், இவரால் ஹிந்துவை நடுநிலைமையோடு விமரிசிக்க முடியுமா என்பது ஆரம்பத்திலிருந்தே கேள்விக்குரியதாக ஆகிறது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் அந்த அமைப்பில் பணியாற்றியதனால் கொஞ்சம் institutionalize ஆகி இருப்பார் என்று தோன்றுகிறது. ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இந்த கவனமான தேர்வை ஹிந்து செய்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இருப்பினும் இந்தத் திசையில் அடி எடுத்து வைத்திருப்பதற்காக ஹிந்துவைப் பாராட்ட வேண்டும். சைனா, இலங்கை, ஈரான், பாகிஸ்தான் எனப் பல விஷயங்கள் குறித்து ஹிந்துவின் நிலைப்பாடுகள் கேள்விக்குரியதாக ஆகியிருக்கும் இத்தருணத்தில் இந்தப் புதிய அமைப்பின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும்.


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

4 Comments:

Blogger Badri Seshadri said...

எனக்கும் இதேதான் தோன்றியது. உள் ஆசாமி - பழம் தின்னு கொட்டை போட்டவர் - ஒருவரை ஏதோ பெயரளவுக்ககுக் கொண்டுவந்திருப்பது போலத்தான் தோன்றுகிறது.

வாசக ஆசிரியர் தேவையென்றால் எவ்வளவோ பேர் கிடைப்பார்கள். வட இந்தியர் ஒருவரை, ஹிந்து பத்திரிகைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத ஒருவரைப் பிடித்துப் போட்டிருக்கலாம்...

January 17, 2006 8:35 PM  
Blogger Boston Bala said...

---வட இந்தியர் ஒருவரை---

Kushwanth singh; but, if they wanted a Southie, how about 'Arundhathi Roy' ;-)) They would have a field day with the latter.

January 17, 2006 11:57 PM  
Blogger நாமக்கல் சிபி said...

பழம் தின்னு கொட்டை போட்டவர் என்பதால் அனுபவ முதிர்ச்சியின் காரணமாக நிச்சயம் நடுநியாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம் அல்லவா. மேலும் ஆசிரியர் குழுவின் ஒத்துழைப்பும் அவருக்கு எளிதாகவே கிடைக்கக் கூடும்.

January 19, 2006 11:58 AM  
Blogger rv said...

உள்ளே இத்தனை ஆண்டுகள் இருந்தவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதால் நம்பிக்கை குறைகிறதேயன்றி கூடவில்லை. பத்ரி சொல்வதுபோல் பெயரளவில் தான் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

சிலமாதங்களுக்கு ஒருமொரு முறை இப்பதவி சுழற்சி முறையில் மாறும் என்பது போன்ற விதிகள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

//
I e-mailed a list of 28 questions to Bill Keller, the executive editor, on Dec. 19, three days after the article appeared. He promptly declined to respond to them. I then sent the same questions to Arthur Sulzberger Jr., the publisher, who also declined to respond. They held out no hope for a fuller explanation in the future.
//
இதை NYT வெளியிட்டதே பெரிய விஷயம். இந்தியாவில் நடக்குமா என்று தெரியவில்லை.

//They would have a field day with the latter.
//
:))))

January 19, 2006 1:00 PM  

Post a Comment

<< Home