<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, December 18, 2005

ஒரு குரங்கின் மனம்

நேற்றிரவு கிங்காங் படம் பார்த்தேன். விமர்சனமெல்லாம் எழுதுவதற்கு ரொம்ப யோசிக்க வேண்டும் என்பதால், சில அனுபவக் குறிப்புகள் மட்டும்:

1. நான் பார்த்த காட்சி இரவு பத்தேகாலுக்குத் துவங்கியது. ஒரு குடம் டயட் கோக்குடன் போய் உட்கார்ந்தேன். தேவைப்படவில்லை.
2. படத்தின் முதல் ஃப்ரேம் ஒரு சின்ன குரங்கு. நண்பரோடு உரையாடல் - "என்னண்ணே ரொம்ப சின்னதா இருக்கு...", "கவலப்படாத, இன்னும் ஒன் அவர்ல வளர்ந்துடும்.."
3. படத்தின் இரண்டாவது நிமிடத்தில் வரும் காட்சி 'வறுமையின் நிறம் சிவப்பி'லிருந்து காப்பி (அந்த குப்பைத்தொட்டி ஆப்பிள்!)
4. நவோமி வாட்ஸ் நூறு வாட்ஸ்.
5. Jack Black-இன் பாத்திரம் ஒரு அக்மார்க் அமெரிக்கனைச் சித்தரிக்கும் பாத்திரம். தன்னம்பிக்கை, தொழில் முனைப்பு, விடாப்பிடி, அசட்டு தைரியம், திருட்டுத்தனம், காரியத்தை சாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்வது, விளைவுகளைப் பற்றி சிந்தியாமை, இயற்கையில் மனிதனின் இடம் பற்றிய மேன்மைவாதம் எல்லாம் சேர்ந்த ஒரு quintessential American பாத்திரம்.
6. டிசம்பர் மாதத்தில் வெளிவந்து மூன்று மணி நேரங்களுக்கு மேல் ஓடிய இன்னொரு படத்திலும் கப்பல் பாறையின் மீது மோதியது நினைவுக்கு வந்தது. ஒரு வித்தியாசம் - அந்தப் படத்தை விட இந்தப் படத்தின் ஹீரோவுக்கு முகத்தில் முடி அதிகம்.
7. படத்தின் நாயகன் வந்த சில நிமிடங்களில் நண்பரின் கமெண்ட் - 'அட, கோபம் இருக்கற இடத்துல தான் குணம் இருக்கும்-னு காமிச்சுட்டான் பாரு!'
8. [Spoiler] படத்தில் வரும் ஆதிவாசி/காட்டுமிராண்டி தீவுக் காட்சிகள் மகா insensitive. இந்தப் படத்தின் ஒரிஜினல் 1933-ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். இப்பொழுது நெளிய வைக்கிறது.
9. [Spoiler] படத்தின் அடிப்படைக் கருவே கொஞ்சம் racist-தான். தனக்குப் படைக்கப்படும் எல்லா கறுப்பு மக்களையும் கொன்று குவிக்கும் கிங்காங் ஒரு செம்பட்டைத்தலை வெள்ளைப் பெண்ணைப் பார்த்ததும் காதலாகிக் கசிந்துருகுகின்றதாம். What, ஓய்?
10. கொஞ்சம் Stockholm syndrome இல்லை?
11. படத்தில் ஒரு 22 அடி குரங்கு வருகின்றது என்று தெரிந்து தான் காசு கொடுத்து டிக்கெட் வாங்குகின்றோம். அதனால் லாஜிக், நம்பகத்தன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கக் கூடாது. இருந்தாலும் அடிப்படை இயற்பியல் விதிகளுக்குக் கொஞ்சம் மரியாதை கொடுத்திருக்கலாம்.
12. கிங்காங் கதாநாயகியைத் தூக்கிக் கொண்டு நியூயார்க் நகர வீதிகளில் நடக்கும் போது, பக்கத்தில் நண்பர், 'அட, மேரியாட்-ல ரூம் போட்டிருக்கு போலிருக்கு!' என்று சொன்னதைத் தவிர்த்திருக்கலாம்.
13. படம் முழுவதும் யாரும் கேட்காத கேள்வி - 'இந்த ஸீனை எப்பிடி எடுத்திருப்பான்?' - ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விஷயத்தில் இந்தப் படம் அதையெல்லாம் தாண்டி விட்டது.
14. படத்தின் முடிவில் நண்பர் சொன்ன, யோசிக்க வைத்த, கமெண்ட் - 'குணா படத்தை அப்டியே எடுத்திருக்கான்!'

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

7 Comments:

Blogger Boston Bala said...

உங்க நண்பரின் காமெண்டுகளுக்கு நன்றியை சொல்லிடுங்க ;-)

December 18, 2005 1:14 PM  
Blogger Srikanth Meenakshi said...

BB, Sure thing :-)

yav, you're right. But as NYT's Scott put it in his review:

"...the human Skull Islanders, whose grunting, wild-eyed savagery is one bit of nostalgia Mr. Jackson might have forgone..."

December 19, 2005 9:51 AM  
Anonymous Anonymous said...

Laced with humour, your page is a welcome break(from my work, of course :). I must figure out how you wrote it in thamizh. if you can tell me how(probably just included a font tag?) that would be great.

Anyway, I've added a link from my own blog to yours.

December 27, 2005 3:42 AM  
Blogger பரி (Pari) said...

Dude,
Where's the "Thendral-Mullai" post?
Controversy? :)

December 27, 2005 3:12 PM  
Blogger Srikanth Meenakshi said...

Pari,

Damned if I know..Got lost in ether-space...I will repost it.

thanks for the heads-up,

srikanth

December 27, 2005 3:16 PM  
Blogger Srikanth Meenakshi said...

Sriram,

Please refer to this link:

http://kasi.thamizmanam.com/index.php?itemid=77

for writing/blogging in Tamil.

Also, visit Thamizmanam.com for more details.

Good luck,

Srikanth

December 27, 2005 3:26 PM  
Anonymous Anonymous said...

another review about kingkong, very funny !

http://valainilam.blogspot.com/

January 04, 2006 10:53 AM  

Post a Comment

<< Home