ஜனநாயக ஈராக்
ஈராக்கில் இன்று தேர்தல் அமோகமாக நடைபெற்றிருக்கிறது. அதன் மக்கள் பெருமையும் சந்தோஷமும் கொள்ள வேண்டிய நாள் இன்று.
இப்பொழுதும் அமைதிக்கு உத்திரவாதமில்லை - இன்றைய தேர்தலின் வெற்றிக்கும் தீவிரவாதிகளின் போர் நிறுத்த அறிக்கை ஒரு முக்கியமான காரணம் தான். இந்தத் தேர்தலால் நாளை ஈராக்கில் சுபிட்சம் மலரப் போவதில்லை தான். இருந்தாலும், ஈராக் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்தின் மேற்பார்வையில் உருவாகி ஈராக் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஈராக் மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக இன்று தேர்தல் நடந்திருக்கிறது. இது நல்ல செய்தி. நம்பிக்கை தரும் செய்தி.
இன்னொரு விஷயம். பொதுவாக அரசியல் ரீதியாகவும், குறிப்பாக ஈராக் விஷயத்திலும் எனக்குத் தெரிந்த வரையில் நடுநிலைமையோடு செயல்பட்டுவரும் அமெரிக்க ஊடக மையமாக NBC-யும், MSNBC-யும் இருக்கின்றன. சமீபத்தில் ஈராக்கிலிருந்து NBC-இன் Richard Engel அளித்துள்ள செய்திக்கட்டுரையில் சில நல்ல செய்திகள் இருக்கின்றன.
இதிலிருக்கும் விஷயங்களும் உண்மைகளென்றால், ஈராக் மக்கள் சந்தோஷமும் பெருமையும் கொள்ள கூடிய சீக்கிரம் மேலும் சில காரணங்களும் இருக்கும்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
0 Comments:
Post a Comment
<< Home