<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, September 03, 2006

Some notes on Hunting and Playing

நேற்று பார்த்தேன். சில குறிப்புகள்:

1. படம் பார்த்து விட்டு வந்தவர்களில் ஒரு பாதி கமலின் தொந்தியை நொந்து கொண்டனர். மீதி பாதி படத்தின் அதீத வன்முறையை குறை கூறினர். எனக்கு இரண்டும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. கமலின் வயதுக்கேற்ற பாத்திரம். மேலும், சென்னை போலீஸ் என்றால் இரண்டு விஷயங்கள் வேண்டும், ஒன்று தொப்பி, இன்னொன்று தொப்பை. Seven, Saw, Pulp Fiction போன்ற படங்களெல்லாம் பார்த்த பிறகு, இந்த படத்தில் இருக்கும் வன்முறையெல்லாம் ஜுஜூபி. இந்த மாதிரி படத்திற்கெல்லாம் வன்முறைதான் அழகு.

2. கமலுக்கும், கௌதமுக்குமான விசேஷ அளவுகோல்களை வைத்து அளந்து பார்த்தால், படம் சுமார். சாதாரண தமிழ்ப்பட அளவுகோல்களின்படி, படம் சூப்பர்.

3. படத்தின் முக்கியக் குறை - வேட்டையாடுவது விளையாடுவதும் ஒரே திரைக்கதையில் சமரசமாக உட்கார மறுக்கின்றன. ஒரு தொடர் கொலையாளியைத் தேடுவது என்பது ஒரு மகா சீரியஸ் மேட்டர். ஒரு ஆண் விதவை, ஒரு விவாகரத்தான பெண்ணை காதலிப்பது என்பதான ஒரு mature காதல் கதை என்றாலும், ரொமான்ஸ் அடிப்படையில் கொஞ்சம் லைட்டான விஷயம் தான். கமல் படத்தில் சொல்வது போல், ஒன்று ஹார்ட்வேர், மற்றது சாஃப்ட்வேர். இரண்டும் ஒரே படத்தில் ஒட்டி உறவாட மறுக்கின்றன. கொலை வழக்கு சுறுசுறுப்பாகப் போய்க் கொண்டிருக்கையில், அதைப் pause பண்ணி விட்டு, காதல் பண்ண ஆரம்பித்தால் கடுப்படிக்கிறது.

4. Having said that, இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கௌதம் ஒரு நல்ல, புத்திசாலித்தனமான, Cliche-க்களைக் களைந்த ஒரு காதல் கதை எடுக்கக் கூடியவர் என்று தோன்றுகிறது. அவர் எழுதும் காதல் வசனங்கள் யதார்த்தமாக இருப்பதுடன், துடிப்புடனும், சினிமாவுக்குத் தேவையான சிக்கனத்துடனும் இருக்கின்றன. கா.கா, வே.வி இரண்டிலும்.

5. மகா முக்கியமான விஷயம் (எனக்கு மட்டும்): நான் ஒரு கோஷ்டியுடன் சென்று பார்த்த படப்பிடிப்பில் எடுத்த காட்சிகள் - கமல் எரியும் வீட்டிலிருந்து வெளியே குதிக்கும் காட்சி, மற்றும் அவரை ஆம்புலன்சில் எடுத்துச் சென்ற காட்சி. இவை எடுக்கப்பட்டது நியூயார்க்கின் தீயணைப்புப் படையின் பயிற்சி மைதானத்தில். Randall's Island என்ற இடத்தில்.

6. படத்தின் கதை சொல்லலை விரைவு படுத்தும் படத்தொகுப்பு யுத்திகள் சில இடங்களில் கைகொடுக்கின்றன, சில இடங்களில் காலை வாருகின்றன. மேலும், கொலை, குற்றவாளிகள், தேடுதல், துப்பறிதல் போன்ற காட்சிகளில் விரைவாகவும், ஜோதிகா, காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சாதாரண கதியிலும் நகர்வது படத்திற்கு ஒரு uneven speed-ஐக் கொடுக்கிறது. ஒரு உதாரணத்திற்கு Speed படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - வேகமாக, ஆனால் சீரான கதியில் செல்லும் அந்தப் படத்தின் நடுவில் அர்த்தமுள்ள, slow-motion ரொமான்ஸ் காட்சிகள் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? Again, going back to note number 3...

7. சில ரஹ்மான்/ஹாரிஸ்/இளையராஜா பாடல்களில் ஓங்கி ஒலிக்கும் இசை வார்த்தைகளை விளங்காமல் செய்து விடுவது போல, இந்தப் படத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்ப சாகசங்கள், கமல் மற்றும் பலரின் நல்ல நடிப்பு முயற்சிகளை மழுங்கடித்து விடுகிறது.

8. படத்தில் தேவையில்லாமல் பல இடங்களில் (இந்தப் பதிவைப் போல) ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. கௌதமை நொந்து கொள்வதா, இல்லை இதுதான் யதார்த்தமா என்று தெரியவில்லை.

9. From the "அனுபவம் பேசுகிறது" files: இந்தப் படத்தை தியேட்டரின் மூன்றாவது வரிசையில் உட்கார்ந்து பார்ப்பது உசிதமல்ல. பார்த்தால் ஏற்படும் தலைவலி, தலை சுற்றல், குமட்டல் மற்றும் ஏனைய உடல் உபாதைகளுக்கும் கௌதமோ, ரவிவர்மனோ மருந்து வாங்கித் தர மாட்டார்கள்.

அவ்வளவுதான்.

தமிழ்ப்பதிவுகள்