<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, August 22, 2006

அமெரிக்காவில் புலி ஆதரவாளர்கள் கைது

இன்று காலை செய்தியின்படி அமெரிக்காவில் விடுதலைப் புலி அமைப்பின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.என்.என் செய்தி எட்டு பேர் கைது என்கிறது; ஹிந்து செய்தி பதிமூன்று பேர் என்று சொல்கிறது.

இவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன:

1. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்காக 500 AK-47 ரக துப்பாக்கிகளையும், விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய ஏவுகணைகளையும் அமெரிக்காவில் கறுப்புச் சந்தையில் வாங்க முயற்சி.

2. அமெரிக்க உள்துறை அலுவலர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்து விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான பட்டியலிலிருந்து நீக்க முயற்சி.

3. அமெரிக்க உள்துறையிலிருந்து இலங்கை குறித்த ரகசிய ஆவணங்களைப் பெற முயற்சி.

இது தவிர, TRO எனப்படும் Tamil Rehabilitation Organization என்ற சேவை அமைப்பு புலிகளுக்கு நிதி திரட்டப் பயன்படுத்தப்படுகின்றதென்ற சந்தேகத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் செய்தி அறிக்கை சொல்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள பலரும் கனடாவைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள்.

ஒருவர் இந்தியாவில் பிறந்த அமெரிக்கர். நாச்சிமுத்து சாக்ரடீஸ் எனப்படும் இவர் அமெரிக்க தமிழர்கள் பலருக்கும் பரிச்சயமானவர். எனக்கும் இவரை ஓரளவுக்குத் தெரியும். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஜூலைத் திருவிழாக்களில் இவரது பங்களிப்புகள் அதிகம். விழா ஏற்பாடுகளில் அதிகம் தலையிடுபவர் என்ற விமர்சனம் இருந்தாலும், பல நல்ல தமிழ்க் கலைஞர்களைக் கண்டெடுத்து அமெரிக்கத் தமிழர்களுக்கு இவ்விழாக்களின் மூலம் அறிமுகம் செய்தவர். கீழுள்ள படத்தில், வலது கோடியில் வேட்டி கட்டிக் கொண்டிருப்பவர்.

இந்த விஷயத்தில் ஒரு உள்துறை அலுவலர் போல வேஷமிட்டு வந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இவரது மகன் அரிஸ்டாடில் இந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்திருக்கிறார்.

விசாரணையில் உண்மை விவரங்கள் தெரிய வரும் என்று நம்புவோம்.

Update: விரிவான தகவல்கள் இங்கே.