<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, July 23, 2006

சண்டே போஸ்ட் - 23

Programming note: அடுத்த சில வாரங்கள் நான் வாஷிங்டனில் இருக்க மாட்டேன். ஆகையால் சண்டே போஸ்டுக்கும், பொதுவாக இந்த வலைப்பதிவிற்கும் ஒரு தற்காலிக விடுமுறை. மீண்டும் சந்திக்கும் பொழுது சந்திப்போம். அது வரை, take care and be good.

நிற்க.

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:


  1. இஸ்ரேல், லெபனான், ஹெஸ்பொல்லா: தொடர்கதை: தொடரும் இஸ்ரேல், ஹெஸ்பொல்லா போர் குறித்த செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு இருநிலைக் குழப்பமே மிஞ்சுகிறது. ஏதோ ஒரு திரைப்படத்தில் கேட்ட வசனம் நினைவுக்கு வருகிறது - "ஒரு புலி மானைத் துரத்தும் காட்சியை தொலைக்காட்சியில் காணும் போது, நாம் எதை ஆதரிக்கிறோம் என்பது நாம் பார்ப்பது எதைப் பற்றிய நிகழ்ச்சி என்பதைப் பொறுத்தது - அது புலிகளைப் பற்றிய ஆவணப் படமென்றால், 'துரத்து, துரத்து, விடாத பிடி..." என்றும், அது மான்களைப் பற்றிய படமென்றால், 'ஓடு, ஓடு, வேகமா ஓடு' என்றும் சொல்லிக் கொண்டிருப்போம்." அது போலத் தான் இருக்கிறது. ஒரு புறம் இஸ்ரேலின் நியாயம் புரிகிறது. தனது அண்டை நாட்டிலிருந்து, அரசாங்கத்திற்கு அப்பாற்பட்ட தீவிரவாதக் குழு ஒன்று ராக்கெட் ஆயுதங்களோடு தன்னை அழிக்க முனையும் போது, அந்தக் குழுவை அழிக்க முனைவதில் என்ன தவறு உள்ளது? இந்தியா இந்தச் சூழலில் இருந்தால் இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூரை மீது நின்று கொண்டு நான் சொல்ல மாட்டேனா? அதே சமயம், இஸ்ரேலின் பல மடங்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களுக்கு லெபனானின் பொது மக்கள் பலி ஆவதைக் கண்டாலும் மிகப் பரிதாபமாக இருக்கிறது. பல தசாப்தப் போரிலிரிந்து மீண்டெழுந்து அந்நாட்டு மக்கள் உருவாக்கிய கட்டமைப்புகள் தவிடுபொடியாவது அநியாயமாகத் தோன்றுகிறது.

    சென்ற இருவார நிகழ்வுகளுக்கு முதல் பொறுப்பு ஹெஸ்பொல்லா, ஈரான், சிரியா ஆகியவற்றின் மீது தான் சுமத்தப் படவேண்டும் என்பதில் எனக்கு ஐயமில்லை. இருப்பினும் அந்தத் தவறுகளுக்காக லெபனானின் பொதுமக்கள் விலை கொடுப்பதையும் காணச் சகிக்கவில்லை.

    இன்றைய போஸ்டில், ஹெஸ்பொல்லாவை நன்கறிந்த ஒருவர், அதன் ஆதார நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்பதை ஆராய்கிறார்.


    As a scholar who has devoted much of my career to following Hezbollah, I have a simple answer. I'm sure that Hezbollah had envisaged, though perhaps not expected, a response of this kind. By provoking its southern neighbor, Hezbollah knew it would present Israel with a ghastly choice. Hezbollah is a popular social movement, and it is well aware that it can be destroyed only if the Israeli army is prepared to commit mass murder, genocide, ethnic cleansing -- use whatever unpalatable term you will -- against the entire Shiite community.

    Israel won't win without wiping out a religious group. However angry the Israelis are, there must be many who won't be able to stomach that possibility, with its hideous historic implications. That's what Hezbollah was counting on 11 days ago when its fighters took Eldad Regev and Ehud Goldwasser captive near the Lebanese border.

  2. ஈராக்கில் முதல் கோணல்கள்: ஈராக்கில் ஆரம்ப வெற்றிகளுக்குப் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்ட அமெரிக்கப் படைத்தளபதிகள் எடுத்த சில தவறான முடிவுகளே இன்றைய கொரில்லா யுத்தத்திற்கு அடிகோலின என்று புதிதாக வெளியாகியுள்ள புத்தகம் ஒன்று விளக்குகிறது. இது புதிய செய்தியில்லை என்றாலும், புத்தக வடிவில் இது பற்றிய தகவல்கள் வெளியாகியிருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

    புத்தகத்தின் சில பகுதிகள் இன்றைய போஸ்டில் வெளியாகியுள்ளன:


    There is some evidence that Saddam Hussein's government knew it couldn't win a conventional war, and some captured documents indicate that it may have intended some sort of rear-guard campaign of subversion against occupation. The stockpiling of weapons, distribution of arms caches, the revolutionary roots of the Baathist Party, and the movement of money and people to Syria either before or during the war all indicate some planning for an insurgency.

    But there is also strong evidence, based on a review of thousands of military documents and hundreds of interviews with military personnel, that the U.S. approach to pacifying Iraq in the months after the collapse of Hussein helped spur the insurgency and made it bigger and stronger than it might have been.
    ...
    On May 16, 2003, L. Paul Bremer III, the chief of the Coalition Provisional Authority, the U.S.-run occupation agency, had issued his first order, "De-Baathification of Iraq Society." The CIA station chief in Baghdad had argued vehemently against the radical move, contending: "By nightfall, you'll have driven 30,000 to 50,000 Baathists underground. And in six months, you'll really regret this."

    He was proved correct, as Bremer's order, along with a second that dissolved the Iraqi military and national police, created a new class of disenfranchised, threatened leaders.

  3. சிலிகான் பள்ளத்தாக்கின் புதிய கோணம்: இணையம் பழைய செய்தியாகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், சிலிகான் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பச் செயல்வீரர்கள் தமது பார்வையை மாற்று எரிபொருள் உற்பத்தி முறைகளின் பக்கம் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். வினோத் கோஸ்லா உட்பட பல தொழில் முதலீட்டாளர்கள் எத்தனால் உற்பத்தி, Fuel cells போன்ற புது முறைகளை ஊக்குவிப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களது முயற்சிகளை இக்கட்டுரை விளக்குகிறது.

    In some ways, it's a natural for Silicon Valley types to get in on alternative energy. Like computer software and hardware, alternative energy is an engineering- based business. Cypress Semiconductor, an established company in Silicon Valley, spun off a unit last fall that makes solar panels, SunPower. Investors have thronged to the stock, which trades at more than 100 times its expected earnings.
    ...
    Many of these venture-backed alternative-energy firms will fail, and some of the publicly held ethanol stocks will turn out to be turkeys. But fierce competition will lead to price reductions of energy-saving equipment. The vast sums being plowed into research may lead to incremental improvements or revolutionary breakthroughs. And as more giant companies such as Wal-Mart go green, the industry will gain scale -- a development that usually leads to price reductions for all consumers.

  4. இன்றைய டூன்ஸ்பர்ரி கார்ட்டூன்: புஷ் அரசாங்கத்தின் ஆஸ்தான கார்ட்டூன் விமர்சகர் காரி ட்ரூடோவின் இன்றைய சித்திரம் படு நக்கல். :-)



Sunday, July 16, 2006

சண்டே போஸ்ட் - 22

நேற்று முன் தினம் 'பட்டியல்' படம் பார்த்தேன். அட, வித்தியாசமான களம், சுவையான கதை, சுறுசுறுப்பான திரைக்கதை எல்லாம் சேர்ந்து சுவாரசியமான படமாக இருக்கிறதே, இதைப் பற்றி ஏதாவது எழுதலாமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், படம் பார்த்து முடித்ததும் நண்பர் ஒருவருடன் உரையாடுகையில் அவர், 'அண்ணே, இது ஒரு தாய்லாந்து படத்திலிருந்து முழுக் காப்பியண்ணே' என்று போட்டுடைக்க, ஆர்வம் கொஞ்சம் காற்றிறங்கிப் போனது. இருந்தாலும், கதை, திரைக்கதைத் தவிர படத்திலிருந்த சில அம்சங்களைச் சின்னதாய் ஒரு பட்டியலாக:

1. படத்தில் நடித்த பலரும் மிக நன்றாக நடித்திருந்தனர். பரத் உண்மையிலேயே பிரமாதமாகச் செய்திருந்தார். ஊமையாய் இருக்கும் ஒரு வடசென்னை மைனர் தாதா உண்மையில் எப்படி நடந்து கொள்வான் என்பதற்கு எனக்கு எந்த ஒரு frame of reference-உம் இல்லையென்றாலும், அவரது கண்களும், கைகளும், முகபாவங்களும் சொல்லும் செய்திகள் மிக கச்சிதமாக பார்ப்பவருக்குப் புரியுமாறு அமைந்திருப்பதை ரசிக்க முடிகிறது. இரண்டு நாயகிகளும் (பூஜா, பத்மப்ரியா) வெறுமனே வந்து போகாமல், அர்த்தமுள்ள பாத்திரங்களை அழகாகச் செய்திருக்கிறார்கள். ஹனீபா செய்த பாத்திரம் அவருக்கென்றே தைக்கப்பட்டது.

2. ஆர்யாவும் ஓரளவுக்கு நன்றாகவே நடித்திருந்தாலும், பரத் முன்பு சோடையாகத் தான் தெரிகிறார். மிகவும் எரிச்சலூட்டியது அவரது வசன உச்சரிப்பு. கொடுக்கப்பட்ட வசனங்களே கொஞ்சம் சுமார் ரகம் தான், அதையும் இவர் ஒரு சன் டிவித்தனமான மேல்தட்டு மழலையில் பேசி இன்னமும் கெடுக்கிறார்.

3. அடுத்த படத்திலாவது பரத் பைக் ஓட்டாமல் நடிக்க வேண்டும்.

4. இசை யுவன் சங்கர் ராஜா - ஒரு பாட்டு தேவலை.

5. படத்தின் முடிவும் 'தூக்கப்பட்டதா' என்று தெரியாது. இருந்தாலும், நான் பார்த்தவற்றுள், வித்தியாசமான அதே சமயம் நேர்த்தியான முடிவினைக் கொண்ட மிகச் சில படங்களில் ஒன்று.

நிற்க.

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:


  1. இஸ்ரேல், லெபனான், ஹெஸ்பொல்லா: சென்ற வாரம் தொடங்கி, கிடுகிடுவென்று தீவிரமடைந்திருக்கும் இஸ்ரேல்-லெபனான் போர் இன்றைய செய்திகளை ஆக்கிரமிக்கிறது. தலைப்புச் சுட்டியின் கட்டுரையில் தற்போதைய நிலை குறித்த செய்திகள் இருக்கின்றன. தெற்கில் காசாவில் ஹமாஸுடனும், வடக்கில் லெபனானில் ஹெஸ்பொல்லாவுடனும் இஸ்ரேல் நடத்தும் இருமுனைப் போரின் சமீபத்திய சம்பவங்களை இந்தக் கட்டுரையில் படம் போட்டு விளக்கியிருக்கிறார்கள்.

    இஸ்ரேல் சம்பந்தப்பட்டுள்ள போர்களில் எப்பொழுதுமே முழுத் தவறு யார் பக்கம் என்று சொல்ல முடியாது. இந்த இரு போர்களில், காசாவில் நடப்பதற்குப் பெருமளவு பொறுப்பு இஸ்ரேல் என்றும், லெபனானில் நடப்பதற்குப் பெருமளவு பொறுப்பு ஹெஸ்பொல்லா என்றும் சொல்லலாம்.

    இந்த சண்டைகள் தொடங்குவதற்கு முன்பாக ஹெஸ்பொல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவுடன் எடுக்கப்பட்ட பேட்டியை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை ஒன்றும் இன்று வெளியாகி இருக்கிறது.

    அந்தக் கட்டுரையிலிருந்து:

    Nasrallah is a man of God, gun and government, a cross between Ayatollah Khomeini and Che Guevera, an Islamic populist as well as a charismatic guerrilla tactician. The black head wrap -- signifying his descent from the prophet Muhammad -- is now his trademark, and he is Lebanon's best known politician. Lines from his speeches are popular ring tones on cellphones. His face is a common computer screensaver. Wall posters, key rings and even phone cards bear his image. Taxis play his speeches instead of music.

    At 46, Nasrallah is also the most controversial leader in the Arab world, at the center of the most vicious new confrontation between Israel and its neighbors in a quarter-century. Yet he is not the prototypical militant. His career has straddled the complex line between Islamic extremist and secular politician. "He is the shrewdest leader in the Arab world," Israeli Ambassador to the United States Daniel Ayalon told me on Friday, "and the most dangerous."

  2. அமெரிக்காவின் அணுசக்தித் திட்டங்கள்: அணுமின் உற்பத்தி தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்து இந்தியாவுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை ரஷியாவுடனும் செய்து கொள்ள அமெரிக்கா முனைந்து வருகிறது. இரண்டும் வெவ்வேறு அமெரிக்க நலன் சார்ந்த காரணங்களுக்காக என்றாலும், அணுமின் உற்பத்தித் தொழில்நுட்பத்தை அமெரிக்கா ஒரு அரசியல்/வர்த்தகத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது தெளிவாகியிருக்கிறது. தொலைநோக்குடன் பார்க்கையில் சர்வதேச அளவில் முக்கிய மற்றும் அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தப் போகும் அணுகுமுறை இது.

    இந்தக் கருத்துப் பத்தியின் ஆசிரியர் இந்த அணுகுமுறையை வரவேற்கிறார்.

    New nuclear plants will help to reduce global warming, prevent energy shortages and -- most urgently -- curb atomic arsenals from being covertly acquired by rogue countries. That is the vision the American and Russian presidents have developed and which they hinted at in a joint statement after their bilateral summit.
    ...
    Driven by events, rather than by any grand concept of his own, Bush has correctly identified nuclear energy as an important component in reducing global warming and pollution, combating proliferation and cutting the unhealthy dependence of industrial and developing nations alike on suppliers such as Saudi Arabia and Venezuela. Bush must now show that his turn to nuclear is not simply short-term opportunism and ad hoc reaction to crisis but a well-integrated approach to a safer future.

  3. சைனாவின் கலாசாரப் புரட்சி: பங்கெடுத்தவர் சொல்லும் கதை: இது கொஞ்சம் நீளமான கட்டுரை என்றாலும், அவசியம் படிக்கப்பட வேண்டியது. 1966-ஆம் ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரை சைனாவில் சர்வாதிகாரி மாவோவின் தலைமையில் நடந்த கொடுங்கோல் ஆட்சியையும், கலாசாரப் புரட்சி என்ற பெயரில் அது நிகழ்த்திய நாடு தழுவிய வன்முறையையும் அதில் படைவீரராகப் பங்கெடுத்த ஒருவர் ஆவணப்படுத்துகிறார். அதே மனிதர் இன்றைய சைனாவில் ஒரு தொழிலதிபராக இருக்கிறார். அவரது வாழ்க்கைப் பயணக்கதையில் ஒரு நாட்டின் வரலாற்றுப் பயணக்கதை அடங்கியிருக்கிறது.

    Mao launched what became known as the Cultural Revolution as a way to regain power in the wake of the disastrous Great Leap Forward, his economic program of the late 1950s/early '60s, which had brought China to the verge of collapse.
    ...
    Nationwide, during the Great Leap Forward more than 30 million perished of starvation. Zhou and his family survived on weeds, seeds and the runny gruel served at the communal canteen. Whenever they sat down to eat, Zhou recalls, he would cry at the sight of the paltry meal before him.
    ...
    At 15, Zhou was given a group of 11 people on whom to single-handedly undertake "thought work," a euphemism for torture and humiliation. One of those on the list was Big Mama, who, while not his biological mother, was the woman who had raised him as her son. Zhou took up the task of denouncing his mother without the slightest hesitation. Under the watchful eye of his revolutionary elders, Zhou forced her to spew a Maoist catechism that neither of them quite understood. "The party is always correct. Long live the Dictatorship of the Proletariat. Long live Chairman Mao."



Wednesday, July 12, 2006

தாவூத் = ஒசாமா

இறந்தவர்களுக்கு அஞ்சலிகளும், அவர்கள் குடும்பங்களுக்கு அனுதாபங்களும், மீண்டும் எழுந்து நின்று, தூசி தட்டிக் கொண்டு, முன்னகர்ந்து கொண்டிருக்கும் மும்பைக்கும், மும்பைக்கார்களுக்கும் ஒரு spirited சலாமும்.


இன்று நிகழ்த்திய உரையில், மன்மோகன் சிங் கூறியிருப்பது:

"மும்பை மற்றும் ஸ்ரீநகர் மக்கள் மீண்டும் தீவிரவாதத்தின் ரணத்தை தாங்கியுள்ளனர். இந்த துயரமான நேரத்தில் நாடே அவர்களின் பக்கம் இருக்கும். நமது நாட்டின் எதிரிகள் நமது அமைதி மற்றும் வளர்ச்சியை சீர்குலைக்க முற்படுவது இது முதல் முறையல்ல. இதுபோன்ற நேரங்களில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்பர் என்பதை அந்த தீய சக்திகள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. துயர சம்பவத்தை எதிர்கொள்வதில் போலீசார், பாதுகாப்புப் படையினர், ரயில்வே அலுவலர்கள், தீயணைப்பு படையினர், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இதர பலர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை அரசு செய்யும். இந்த தீவிரவாத சவால்களை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அரசு செய்யும். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த போரில் நாம் வெற்றி பெறுவோம்."

மொத்தத்தில் மன்மோகன் சிங்கின் அகராதிப்படி, தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தீவிரவாதிகள் நிகழ்த்தும் வன்முறைகளிலிருந்து வெற்றிகரமாக சுதாரித்துக் கொள்வது, அவ்வளவுதான்.

ஒரு உவமை சொல்லலாம். பள்ளிக்கூடத்தில் முரட்டுப்பையன்களிடம் (bullies) அடி வாங்கும் நோஞ்சான்கள் சொல்லும் வார்த்தை ஒன்று உண்டு. அவர்கள் அடிக்க அடிக்க, திருப்பி அடிக்கத் திராணி/தைரியம் இன்றி, அடி வாங்கிக் கொண்டே, 'எனக்கு வலிக்கவேயில்லையே' என்று கண்களில் நீர்மல்க ஜம்பம் பேசுவார்கள். ஏதோ ஓரளவுக்குத் தனது சுயமரியாதையை ஸ்தாபித்துக் கொண்டோம் என்ற ஒரு திருப்திக்காக. இந்தியப் பிரதமர் இப்பொழுது பேசுவது அது போலத்தான் இருக்கிறது.

இப்படியே இருக்கலாம்... என்றாவது ஒரு நாள் தீவிரவாதிகள் மனம் திருந்தி 'பிழைத்துப் போ' என்று விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில். அல்லது செய்ய வேண்டியதைச் செய்யலாம்.

அமெரிக்காவின் 9/11 நிகழ்விற்குப் பிறகு இந்நாடு செய்த உருப்படியான விஷயம், ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்து தாலிபானை ஓட ஓட விரட்டியது தான். அதன் பிறகு, அதை அரைகுறையாக விட்டு விட்டு ஈராக், ஈரான் என்று திசை திரும்பி விட்டாலும், முதலில் செய்த காரியம் சரியான, செய்யப்படவேண்டியிருந்த ஒன்று. அந்த சமயத்தில் சிந்தனைவாதிகளெல்லாம் இதை யார் செய்தது, ஆதாரம் என்ன என்றெல்லாம் மிதமிஞ்சிய schadenfreude-உடன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போது, அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தயங்காமல் எடுத்த நடவடிக்கை அது. ஏனெனில் அமெரிக்காவிடம் ஆதாரங்கள் இருந்தன; அவர்களுக்குத் தெரிந்திருந்தது யார் செய்தது என்று. வரலாறு அவர்களது எதிர்வினையை நியாயப்படுத்தியது.

இந்தியாவிற்கு இன்று தெரியும் இந்த குண்டு வெடிப்புகளை யார் செய்தது என்று. பதிமூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்ததை செய்தது யாரென்று பதிமூன்று வருடங்களாகத் தெரியும். இன்றேனும் இந்தியா அமெரிக்கா ஆற்றிய எதிர்வினைக்கு நிகரான ஒரு எதிர்வினையை நிகழ்த்த வேண்டும்.

9/11 நிகழ்விற்குப் பிறகு அமெரிக்கா ஒசாமாவை தன்னிடம் ஒப்படைக்க ஆஃப்கானிஸ்தானுக்குக் கெடு வைத்தது போல், இந்தியா பாகிஸ்தானுக்கு தாவூத் இப்ராஹிமை ஒப்படைக்கக் கெடு வைக்க வேண்டும். இது வெற்று வார்த்தையாக இருக்கக் கூடாது. தாவூதை ஒப்படைக்காத பட்சத்தில், இந்தியா பாகிஸ்தான் மீது போர்த் தொடுக்க வேண்டும்.

இதை இப்பொழுதே செய்ய வேண்டும். மும்பை குண்டு வெடிப்பை ஒட்டிச் செய்ய வேண்டும். இப்பொழுது செய்தால் தான், உலக அரங்கில் இது ஒரு நியாயமான எதிர்வினையாகப் பார்க்கப்படும். பாகிஸ்தானை அமெரிக்கா தொடங்கி உலக நாடுகள் நெருக்கவும் முடியும். இந்த ஒரு தீவிரவாதியையும் அவனது கும்பலையும் காப்பாற்றுவதற்காகப் போருக்குச் செல்லத் தயாரா என்ற கேள்விக்குப் பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

இதை ஏதோ ஒரு arm-chair general-தனமாகவோ, எந்த ஒரு neo-con வெறியுடனோ சொல்லவில்லை. இந்தியா தனது குடிமக்களை தீவிரவாதத்திலிருந்து பாதுகாக்க இந்த ஒரு முக்கியமான நடவடிக்கைத் தேவை என்ற தெளிவுடனேயே சொல்கிறேன்.

செய்யுமா இந்தியா?


Sunday, July 09, 2006

ராஜா ராவ் (1908 - 2006)

முதுபெரும் இந்திய ஆங்கில எழுத்தாளர் ராஜா ராவ் நேற்று (சனிக்கிழமை) தனது தொண்ணூற்றி ஏழாம் வயதில் இறந்து விட்டார் என்று ஹிந்துவில் செய்தி கூறுகிறது.

இவரது சமகால எழுத்தாளர்களான ஆர்.கே.நாராயண், முல்க் ராஜ் ஆனந்த் ஆகியோர் எழுதிய அளவுக்கு இவர் அதிகமாக எழுதவில்லை. அவர் எழுதியவற்றுள்ளும் நான் அதிகம் படித்ததில்லை. சில கட்டுரைகளையும் ஒரு நாவலையும் மட்டுமே படித்திருக்கிறேன். இருந்தாலும், நான் படித்த அந்த ஒரு நாவலான 'காந்தபுரா' என்னை மிகவும் பாதித்த நாவல்களுள் ஒன்று.

காந்தபுரா ஒரு வித்தியாசமான நாவல் - அதன் கதை மட்டுமல்ல, அதைச் சொன்ன விதமும் நடையும் கூட மிகவும் பிரத்யேகமானது. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், ஒரு அத்துவான கர்நாடக கிராமம் எப்படி காந்தியின் சிந்தனைகளாலும் செயல்பாடுகளாலும் வசீகரிக்கப்பட்டு தன்னை போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டது என்பதை விவரிக்கும் இந்நாவல், முழுவதும் ஒரு முதிய மாது ஒருத்தி சொல்வது போல எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில்! நாவலின் முன்னுரையில் ராஜா ராவ், இந்த பாணியில் ஆங்கிலத்தில் எழுதுவதன் சிரமங்களைப் பற்றிச் சொல்கையில், ஆங்கிலத்தில் இருக்கும் infinitives, preposition, conjunction போன்றவை எப்படி ஒரு பேச்சுச் சொல்லோட்டத்திற்குத் தடையாக உள்ளன, இந்திய மொழிகளில் இவை இல்லாததால் ஆங்கிலத்தில் இந்திய உரையாடல்களை எழுதுவது எத்தனை கடினமானது என்றெல்லாம் சொல்லி அங்கலாய்த்திருப்பார். இப்புத்தகத்தைப் படிப்பது ஆரம்பத்தில் மிகக் கடினமாக இருக்கும் - அதன் வித்தியாசமான நடையால். ஆனால் போகப்போகப் பழகி விடும். அந்நாவலின் ஆரம்ப பத்திகளில் இருந்து சில வரிகளை அதன் நடைக்கு உதாரணமாகக் காட்டலாம்:

Kenchamma is our goddess. Great and bounteous is she. She killed a demon ages, ages ago, a demon that had come to demand our young sons as food and our young women as wives. Kenchamma came from the Heavens-it was the sage Tripura who had made penances to bring her down-and she waged such a battle and she fought so many a night that the blood soaked and soaked into the earth, and that is why the Kenchamma Hill is all red. If not, tell me, sister, why should it be red only from the Tippur stream upwards, for a foot down on the other side of the stream you have mud, black and brown, but never red. Tell me, how could this happen, if it were not for Kenchamma and her battle?

கதையில் என்னை வெகுவாக பாதித்தது, காந்தியின் ஆளுமை எந்த அளவுக்கு நாட்டின் மூலை முடுக்குகளில் வியாபித்திருந்தது என்பது பற்றிய தகவல்கள் தாம்். பி.ஏ.கிருஷ்ணன தனது் 'புலி நகக்கொன்றை' நாவலிலும் இந்த விஷயத்தை கொஞ்சம் தொட்டிருப்பார். 'காந்தபுரா'வில், மூர்த்தி என்ற கதாநாயகன் மட்டும் தான் காந்தியை நேரில் கண்டிருப்பான். காந்தியை சந்தித்து விட்டு திரும்பிய பின் அவனிடம் தெரியும் மாறுதல்களைக் கண்டு கிராமமே உத்வேகம் பெறும். கிராமத்தின் அருகில் இருக்கும் ஒரு மதுபான நிறுவனத்தை எதிர்த்து அறவழிப் போராட்டங்கள் நிகழ்த்தத் தொடங்கும். இது நடக்கையில், இன்னொரு பக்கம், மூர்த்தி காந்தி வழிச் சிந்தனைகளில் மிகுந்த தேர்ச்சி பெற்று சத்தியாகிரகம், உண்ணாவிரதம் ஆகியவற்றின் பல பரிமாணங்களை சுய பரிசோதனைகள் மூலம் கண்டடைவான். கதை இந்த இரு தளங்களான மூர்த்தியின் ஆன்மீக விழிப்பு, கிராமத்தின் அறவழிப் போராட்டங்கள் ஆகியவை எவ்வாறு ஒன்றையொன்று முன்னகர்த்துகின்றன என்பதாய் விரியும்.

'உலகில் எந்த மூலையில் ஒரு தவறு நிகழ்ந்தாலும், நானும் சற்று குற்ற உணர்வு கொள்கிறேன்' என்ற காந்தியக் கோட்பாட்டினை உள்வாங்கிக் கொண்டு அதையொட்டி வாழ முயன்ற ஒரு இளைஞனின் கதையாகவும், தங்களை மிஞ்சிய ஒரு பெரும் பொது நலப் போராட்டத்திற்குத் தம்மை ஈந்த ஒரு கிராம மக்களின் கதையாகவும் எழுதப்பட்ட இந்நாவல், வாசிக்கும் ஒவ்வொருவரையும் சமுதாயத்தில் தமது இடம் என்ன என்பதைப் பற்றி யோசிக்க வைக்கும். எந்த ஒரு தொழில் நுட்பத் தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லாத காலத்திலும் இந்திய விடுதலைப் போராட்டம் எப்படி நாடு தழுவியதாக இருந்தது என்பதை அறிய உதவுவதாகவும்் இருக்கும்.

தனது நிஜ வாழ்விலும் காந்திய சிந்தனைவாதியாக இருந்த ராஜா ராவ் "Great Indian Way: A Life of Mahatma Gandhi" என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். காந்தபுரா தான் அவரது ஆகச்சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. அதைத் தவிரவும், "The Serpent and the Rope", "The Cat and Shakespeare" ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

அவரது நினைவிற்கு எனது அஞ்சலிகள்.

ராஜா ராவ் பற்றி மேலதிகத் தகவல்கள்


'பிஞ்சு மனம்'

இந்த வருட மே மாத இறுதியில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் குறும்படக் கலைஞர் அஜீவன் அவர்கள் அமெரிக்கா வந்திருந்தார். நண்பர் பி.கே.சிவகுமார் மற்றும் 'திண்ணை' ராஜாராம் அவர்கள் துணையோடு ஏற்பாடாகியிருந்த இப்பயணத்தின் முதல் நிறுத்தமாக வாஷிங்டன் வந்தடைந்தார். இங்கே அவர் ஒரு குறும்படப் பயிற்சிப் பட்டறை நடத்துவதாகத் திட்டம். அவர் வாஷிங்டன் வந்திறங்கியது ஒரு திங்கள்கிழமை, இங்கே சனி காலை வரை இருப்பதாக ஏற்பாடு. இங்கே இருந்த நாட்கள் எல்லாம் வாரநாட்களாகையால், மாலைகளில் மட்டுமே பயிற்சியை நடத்த முடிந்தது. விருப்பம் தெரிவித்த பலராலும் கலந்து கொள்ள இயலவில்லை. ஐந்தே பேர் தான் இருந்தோம் - நான், 'மணிக்கூண்டு' சிவா, சங்கரபாண்டி, வெங்கடேஷ் பாபு - இவர்களோடு 'Smart cookie' என்றொரு குழந்தைகள் படத்தை உருவாக்கி கொஞ்சம் திரை இயக்க அனுபவம் பெற்றிருந்த தீபா ராஜகோபால் என்பவர். அவரைத் தவிர மற்ற எவருக்கும் ஆர்வமிருந்த அளவுக்கு அனுபவம் இல்லை.

மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் சுவாரசியமாக நிகழ்ந்தன. நான்காவது நாள் ஒரு குறும்படத்தை எடுப்பதாகத் திட்டமிட்டிருந்தோம். மூன்றாவது நாளே இது பற்றி கொஞ்சம் பேசியிருந்தோம். குழந்தைகளின் உளவியலை மையமாக வைத்து தீபா சொன்ன ஒரு எளிமையான கதையைத் தேர்ந்தெடுத்து அஜீவன் இயக்கத்தில் படப்பிடிப்பை நிகழ்த்தினோம் (பயிற்சியும் படப்படிப்பும் நடந்தது என் வீட்டின் கீழ்நிலையிலும் வாழ்நிலையிலும்). எடுத்த படத்தை அவர் சுவிஸ் திரும்பிச் சென்று தொகுத்து, இசை சேர்த்து, சில நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்தார். படம் எடுக்கையில் இது எப்படி வரும் என்ற ஐயப்பாடு இருந்தாலும், அஜீவனின் திறமையில் அழகாகவே வந்திருக்கின்றது என்று நினைக்கிறேன். படம் ஓடுவது ஒன்றரை நிமிடம்தான் - சின்ன கதையைச் சிக்கனமாகச் சொல்கிறது.



படத்திற்குப் பின்னால் ஒரு சின்ன கதை: படம் தனது இன்னொரு குழந்தை மீது ஒரு தாய் செலுத்தும் அன்பைக் கண்டு சலனமுறும் ஒரு மகளைப் பற்றியது. இப்படத்தில் நடித்த மகள் (காவ்யா), இப்படத்தில் வரும் தாயின் (தீபா) உண்மையான மகள். படத்தில் வரும் சிறு குழந்தை படத்திற்காக இரவல் பெறப்பட்டது. அக்குழந்தையின் தாயும், அக்காவும் (இன்னொரு காவ்யா வயது - சுமார் ஐந்து வயது - பெண்) படப்பிடிப்பின் போது வீட்டில் தான் இருந்தார்கள். அப்பெண்ணிற்கு தான் படத்தில் இல்லையே என்று ஒரு சின்ன வருத்தம் முதலில் இருந்தே இருந்தது. மேலும், தனது தங்கையை காவ்யா ஏன் தங்கையாக பாவிக்கிறாள் என்று வேறு ஒரு கேள்வி. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் ஒரு பேப்பரும் பேனாவுமாக 'உர்'ரென்று முகத்தை வைத்துக் கொண்டு ஏதோ வரைந்து/எழுதிக் கொண்டிருந்தாள். படப்பிடிப்பெல்லாம் முடிந்த பிறகு எதேச்சையாக அந்தப் பெண் வரைந்த படத்தைப் பார்த்தால், அதில் ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு பெரிய பெண், ஒரு குழந்தை - அதன் கீழ் - "MY daddy, MY mommy, MY sister" என்று எழுதி அவற்றிற்குக் கீழே பெரிய எழுத்துக்களில், "MY OOWN FAMILY" என்று எழுதியிருந்தது! எங்களுக்கெல்லாம் அதைப் பார்த்ததும் கொஞ்சம் பாவமாக இருந்தது. அஜீவனும் 'சே, பாவம்' என்று சொல்லி விட்டு, கொஞ்ச நேரத்தில், 'அட, இதையே ஒரு படமாக்கலாம் போலிருக்கே' என்றார். :-)

படத்தைப் பற்றி கானாபிரபுவின் பதிவு.

சண்டே போஸ்ட் - 21

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:


  1. ஈராக்கின் பேசப்படாத மரணங்கள்: ஹடிதா, மஹ்மூதியா போன்ற வெளிச்சத்துக்கு வந்துள்ள ராணுவ வரம்பு மீறல்கள் தவிர்த்து, அன்றாட வாழ்வில் விபத்துக்களாகவும், போரின் எதேச்சை நிகழ்வுகளாகவும் நடந்து வரும் மரணங்கள் குறித்து இக்கட்டுரை பேசுகிறது. தவறிழைக்க நினைக்காமல், ஒழுங்காக செயல்பட முனையும் வீரர்களும் சூழ்நிலைகளின் விளைவாக நிதானமிழந்து செயல்பட நேர்கிறது என்று சொல்கிறது. அது தவிர, அமெரிக்க வீரர்களின் உயிரிழப்புகளை துல்லியமாக கணக்கு வைத்திருக்கும் ராணுவம், ஈராக்கிய சிவிலிய உயிரிழப்புகளைப் பற்றி எந்தத் தகவலையும் சேமிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறது.

    ஈராக்கிய உயிர்களை அமெரிக்க உயிர்களுக்குச் சமமாக மதியாமையே இத்தகைய வேறுபாட்டிற்கு அடிப்படைக் காரணம் என்று சொல்கிறது.

    This disdain for counting bodies, especially those of Iraqi civilians killed in the course of U.S. operations, is among the reasons why U.S. forces find themselves in another quagmire. It's not that the United States has an aversion to all body counts. We tally every U.S. service member who falls in Iraq, and rightly so. But only in recent months have military leaders finally begun to count -- for internal use only -- some of the very large number of Iraqi noncombatants whom American bullets and bombs have killed.
    ...
    "You have to understand the Arab mind," one company commander told the New York Times, displaying all the self-assurance of Douglas MacArthur discoursing on Orientals in 1945. "The only thing they understand is force -- force, pride and saving face." Far from representing the views of a few underlings, such notions penetrated into the upper echelons of the American command. In their book "Cobra II," Michael R. Gordon and Gen. Bernard E. Trainor offer this ugly comment from a senior officer: "The only thing these sand niggers understand is force and I'm about to introduce them to it."

    மற்றொரு செய்தியில், ஹடிதா குறித்த ராணுவ ஆய்வின் அறிக்கையிலிருந்து சில பகுதிகள் வெளி வந்திருக்கின்றன. வீரர்களும் அதிகாரிகளும் அந்நிகழ்வைக் கையாண்ட விதம் முற்றும் சரியில்லை என்று இவ்வறிக்கை குற்றம் சாட்டுகிறது.

  2. ஈரான் புரட்சி முயற்சிகள்: 1999-ஆம் ஆண்டு இதே நாளில், ஈரானில் மாணவர்கள் திரண்டெழுந்து அந்நாட்டின் மதகுருமார்களின் அரசியலை எதிர்த்து புரட்சி செய்ய முயன்றனர். சைனாவின் தியானென்மான் போலவே, இம்முயற்சியும் ராணுவத்தால் நசுக்கப்பட்டது. அதில் பங்கு பெற்ற மாணவர்களின் இன்றைய கருத்துக்களை இக்கட்டுரை முன்வைக்கிறது. சைனாவைப் போலவே இங்கும் அம்மாணவ இயக்கம் இன்று சிதறிப் போயிருக்கிறது. ஈரானிய அரசியல்வாதிகள் தாம் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு போரில் இருப்பது போல மக்களை திசை திருப்பி வைத்திருப்பதாகவும், அதனால் அம்மக்கள் புரட்சியில் இப்பொழுது ஆர்வம் செலுத்தவில்லை என்றும் சொல்கிறது.

    மாணவர்களும் இன்று 'புரட்சியெல்லாம் வேண்டாம், சீர்திருத்தம் வந்தால் போதும்' என்று தங்கள் நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    Naturally, Iran's regime will not celebrate today's anniversary, but neither will Iran's opposition. The Iranian student movement is a shambles -- divided, confused and lacking any cause for celebration. In extensive conversations with students and student veterans of the 1999 protests, who asked to remain anonymous because of fears about their safety, I found that one message emerged loud and clear: Iran does not need another revolution, but it is in desperate need of reform.

  3. ஒரு விஞ்ஞானியின் பார்வையில் கடவுள்: எனக்கு நீண்ட நாளாக இருக்கும் ஒரு தீராத சந்தேகம், கடவுள் நம்பிக்கை வைத்திருக்கும் விஞ்ஞானிகளுடைய நம்பிக்கைக்கு ஆதாரங்கள் என்ன என்பது. அவர்கள் கடவுளை எப்படி உருவகப்படுத்திக் கொள்கிறார்கள், தங்கள் அறிவியலோடு எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒவ்வொரு விதத்தில் விடை சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானி இது குறித்து எழுதிய புத்தகத்திற்கான மதிப்புரை இன்றைய புத்தகக் கொத்தில் உள்ளது. 'The Language of God' என்ற இப்புத்தகத்தை Francis Collins என்ற மரபணுவியலாளர் எழுதியுள்ளார்.

    Collins writes just enough about his youth for us to learn that he was brought up in a household indifferent to religion; he became an agnostic in college and an atheist in graduate school, where he studied chemistry. Only in medical school did he reverse that trajectory, gradually accepting the existence of God and embracing evangelical Christianity -- led to belief, like St. Augustine, less by longing than by reason.

    Reason persuaded him that the universe could not have created itself; that humans possess an intuitive sense of right and wrong, which he calls, following Immanuel Kant, "the Moral Law"; and that humans likewise feel a "longing for the sacred." The source of this longing, the Moral Law and the universe, he came to believe, was the God described in the Bible, a transcendent Creator, Companion, Judge and Redeemer. He found additional evidence of a Creator in the eerie ability of mathematics to map the universe and in the numerous material properties -- from the slight imbalance between matter and anti-matter in the Big Bang to the binding energy within the atomic nucleus -- that seem to have been exquisitely tuned to fashion a world that would give rise to complex forms of life.



Sunday, July 02, 2006

சண்டே போஸ்ட் - 20

சென்ற வாரம் புதனன்று புதிய சுப்பர்மேன் படம் வெளியானது. அன்று காலை அலுவலகம் சென்று கொண்டிருக்கையில், கார் ரேடியோவில் படத்தைப் பார்த்த ஒருவர் அது குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். படத்தின் தொழில்நுட்ப சாகசங்களை கொஞ்ச நேரம் சிலாகித்து விட்டு சட்டென்று கியர் மாற்றி, "உண்மையில் இந்தப் படம் கிறித்துவ மதக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட படம்" என்று சொல்லி வைத்தார். கூட உரையாடிக் கொண்டிருந்தவர் உடனே சுவாரசியமாகி, விளக்கிச் சொல்லுமாறு கேட்க, அவர், "யோசித்துப் பாருங்கள், அமெரிக்காவில் தீவிரவாத பயங்களும் போர்க்குழப்பங்களும் நிறைந்திருக்கும் இந்நாட்களில், அன்றாட வாழ்வில் எப்பொழுது என்ன நடக்குமோ என்று மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கையில், ஒரு அதிரூப சர்வசக்தி பொருந்தியவன் 'திரும்பி' வந்து நம்மைக் காப்பாற்றுகிறான் என்ற கதையை அப்படித்தானே பார்க்க முடியும்" என்றார்.

சுவாரசியமாக இருந்ததால், அலுவலகம் வந்ததும் வலையில் கொஞ்சம் துழாவிப் பார்த்தேன். சுலபமாக இக்கட்டுரை கிடைத்தது. படத்தின் இயக்குனரே இதை ஆமோதித்திருக்கிறார்:

Superman Returns is splashed with enough Christian imagery for a cathedral full of stained-glass windows.

The movie's director is Jewish. So were the two teenagers who created the Superman character - based in part on Jewish sacred stories and legends - in 1932. Nonetheless, obvious images from iconic Christian art and stories are as common in this film as product placements are in most summer blockbusters:

Superman, having been sent by his father, saves the world while (almost) sacrificing his own life. The villain, Lex Luthor, stabs him in the side. While he is being brutally beaten, the only sympathetic face belongs to a "fallen woman."

Director Bryan Singer has said he sees Jewish and Christian roots in Superman.

"So it's sort of the American dream combined with a little bit of the myth, the concept of Messiah. He's the Jesus Christ of superheroes," he told the magazine Wizard last year.

இதில் தவறாக எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. சுவாரசியம் கருதி மட்டுமே பகிர்ந்து கொண்டேன்.

நிற்க.

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:


  1. தோஹா சுற்றின் தொடரும் தோல்வி: ஜெனீவாவில் நடந்து வந்த சர்வதேச வர்த்தக அமைப்பின் (WTO) தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மறுபடியும் எந்த ஒரு உடன்படிக்கையும் இல்லாமல் முடிக்கப்பட்டிருக்கிறது. உடன்படிக்கை எதுவும் நிகழும் என்ற நம்பிக்கையும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை என்று சொல்லப்படுகிறது. விவசாய மானியங்கள் குறித்த விவாதங்கள் எதிர்பார்த்தபடியே அமெரிக்கா/ஐரோப்பாவிற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான வாக்குவாதங்களாக மாறி விட்டுள்ளன. அமெரிக்கா வளரும் நாடுகள் மானியங்களை ஒழிக்க முயன்றால் தானும் முயல்வதாகக் கூறுகிறது. வளரும் நாடுகளோ தங்கள் நாடுகளில் வழங்கப்படும் மானியங்களையும் அமெரிக்க மானியங்களையும் ஒரே நிலையில் வைத்து ஒப்பிடவே முடியாது என்று வாதிடுகின்றன.

    ஜெனீவா பேச்சு வார்த்தைகளில் இந்தியாவின் கமல்நாத் சரியாகச் செயல்படவில்லை என்று குறிப்பாக கட்டுரை சுட்டிக் காட்டுகிறது:

    Among the most militant among the developing country ministers was India's Nath. He infuriated U.S. and other officials by announcing on Friday, just as the conference was beginning, that he was strongly considering leaving early because of the lack of promise for a breakthrough. And, according to participants at one Friday night meeting, Nath showed up very late because, he said, he wanted to catch the World Cup soccer match between Argentina and Germany -- although the representatives of Argentina had come to the meeting on time.

    Nath and other ministers from developing nations were particularly critical of the United States for refusing to break the stalemate by going further in reducing subsidies. The hard-line U.S. position helped take some of the pressure off of European Union negotiators, who have been vilified at past WTO meetings as the biggest coddlers of rich farmers.

    இன்னொரு செய்தியில், அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு விவசாயம் பண்ணாமல் இருப்பதற்காக கொடுக்கும் மானியங்கள் பற்றி ஒரு நீண்ட கட்டுரை வெளியாகி இருக்கிறது.

    இரண்டு விஷயங்களையும் சேர்த்து வாசிக்கையில், வளரும் நாடுகள் சொல்வதில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.

  2. குவாண்டானமோ சட்டங்கள்: சென்ற வாரம் அமெரிக்க உச்ச நீதி மன்றம் குவாண்டானமோக் கைதிகளைப் பற்றி அளித்த ஒரு தீர்ப்பு புஷ் அரசாங்கத்திற்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதன்படி, புஷ் அரசாங்கம் இந்நாட்டுப் பாராளுமன்றத்தை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக உருவாக்கிய (அக்கைதிகள் எப்படி விசாரிக்கப்படுவார்கள் என்பது பற்றிய) சட்டங்கள் செல்லுபடியாகாதவை என்றாகிவிட்டன. இப்பொழுது அக்கைதிகள் எப்படி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை அமெரிக்கப் பாராளுமன்றம் முடிவு செய்ய வேண்டும். அச்சட்டங்களை அமல் செய்வது மட்டுமே புஷ் அரசாங்கத்தின் வேலையாக இருக்கும்.

    இன்று போஸ்ட் வெளியிட்டுள்ள தலையங்கம் இத்தீர்ப்பை ஒரு வாய்ப்பாகக் கருதும்படி வலியுறுத்துகிறது. ஒழுங்கான, சர்வதேச சட்டங்களை மீறாத ஒரு புது அமைப்பை உருவாக்கும்படி கோருகிறது.

    At a minimum, Congress should force the administration to publish the guidance it gives to personnel in the field concerning the article's meaning. More broadly, it should consider legislation putting meat on the treaty's rather bare bones. It should consider every exceptional practice the administration has tried to justify: from "waterboarding" and other practices of torture and near-torture to "renditions" of suspects to foreign governments to the holding of prisoners incommunicado. One obvious place to start would be to stipulate that the CIA's network of secret prisons is not consistent with Geneva's requirements: Its detainees must be transferred to U.S. facilities, registered with the International Red Cross and guaranteed humane treatment.

  3. கிராமங்களில் சுற்றுலா: சிறு வயதில் இந்திய கிராமம் ஒன்றில் வசித்த ஒரு அமெரிக்கப் பெண்மணி தனது நினைவுகளை அசைபோட மீண்டும் இந்தியா சென்று வந்து தனது பயணம் குறித்து எழுதியிருக்கிறார். ராஜஸ்தான் ஜெய்ப்பூர் அருகே உள்ள இவர் சென்ற இடம் உண்மையிலேயே கிராமமா என்பது கட்டுரை படிக்கையில் சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் சுவாரசியமான கட்டுரை.

    I was looking for something that feels a little more real, like what I had found more than 20 years back. I was an American kid of 6 when I first set foot in a Rajasthani village where my father was born and raised. After the initial culture shock -- no electricity or running water, for starters -- I glimpsed a world of color, anchored in old ways. Admittedly, I've looked back since then with misty eyes -- something my next trip to the village, in 2004, didn't cure me of. After all I'd heard about the flight of Indians (including some of my cousins) to cities, I expected a scene straight out of a Feed the Children ad. Instead, green fields of wheat and mustard swayed in the breeze. Schoolchildren treated me to dance and song. Women in red saris with gold and silver trim grabbed my hand and led me into their homes for a cup of chai.

  4. சிறகுகளுடன் ஒரு புத்தகம்: எனக்கு நவீனக் கலைப்படைப்புகள் பெரும்பாலும் சுத்தமாகப் புரிவதில்லை என்றாலும், அபூர்வமாக அத்தகைய ஒரு ஓவியமோ சிற்பமோ பார்த்தவுடன் சட்டென்று மனதில் உட்கார்ந்து விடும். ஏனென்று தெரியாது. இன்று காலை பேப்பரைப் புரட்டிக் கொண்டிருக்கையில் அப்படி ஒரு படம் - ஒரு சிற்பத்தின் படம் - தென்பட்டது:

    "Book with wings" என்ற தலைப்பிலான இந்தப் படைப்பை Anselm Kiefer என்ற ஜெர்மானியக் கலைஞர் உருவாக்கியிருக்கிறார். இந்த வாரம் வாஷிங்டன் ஸ்மித்ஸோனியத்தின் ஹெர்ஷார்ன் ம்யூசியத்தில் அவரது படைப்புகள் கண்காட்சியில் உள்ளன.

    அவரது படைப்புகள் இன்னமும் சில.