<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Friday, January 06, 2006

சுஜாதா, பிராமணர், தலித்

விகடனில் இந்த வாரம் சுஜாதா கட்டுரையைப் படித்து விட்டு கொஞ்சம் நீளமாக ஒரு பதிவை எழுதினேன். சரியாக வரவில்லை, அழித்து விட்டேன். எழுதாமலே விடவும் மனது கேட்கவில்லையாதலால், சுருக்கமாக ஒரு பதிவு.

இந்த வார கற்றதும் பெற்றதும் கட்டுரையில் பிராமணர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதைப் பற்றியும் பொதுவாக பிராமணர்களின் சமூகப் பிரச்னைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். அச்சங்கத்தின் வெள்ளிவிழா மாநாட்டில் அவருக்கு 'வாழ்நாள் சாதனை விருது' வழங்கப்பட்டதை ஒட்டி எழுதப்பட்டது.

முதலில் சாதி சார்ந்த சங்கங்களை அங்கீகரிப்பதே தவறு. அதுவும் மேல்சாதி சங்கங்கள் கண்டிப்பாக ஆதரிக்கப் படக் கூடாது; 'அவங்க எல்லாம் வச்சிருக்காங்க' என்பதெல்லாம் சும்மா பம்மாத்து வாதம்.

கற்றவர்கள் இது போன்ற சங்கங்கள் தரும் விருதுகளைப் பெற்றவர்கள் ஆவது பெருமைக்குரிய விஷயமல்ல.

இதுவாவது பரவாயில்லை. ஆனால், பிராமணர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்று கொஞ்சம் கோடி காட்டிவிட்டு கீழ்கண்டவாறு எழுதுகிறார்:

திங்கள்கிழமை, திருமதி திலகவதியின் அம்ருதா பதிப்பகத்தில் 43 தலித் எழுத் தாளர்களின் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகளின் தொகுப்புப் புத்தகங்களை வெளியிட்டு பேச வாய்ப்பு கிடைத்தது. இந்த வெளியீட்டு விழாவில், நான் எழுதிவைத்துப் பேசியதை ‘உயிர்மை’ பத்திரிகையில் பார்க்கலாம். ‘தலித் இலக்கியம்’ என்ற தனிப் பாகுபாடு தேவையா, தலித் எழுத்தாளர்களால் மட்டும்தான் தலித் இலக்கியம் படைக்க முடியுமா ஆகிய இரு கேள்விகளுக்கும் விடை காண முயற்சித்தேன்.

இவ்விழாக்களில் கலந்துகொண்ட பின் யோசித்துப் பார்த்ததில், இந்த இரு இனத்தவருக்கும் பொதுவான சில பிரச்னைகள் இருப்பது தெரிந்தது.

இந்த கடைசி வாக்கியத்தைப் படித்ததும் தான் சுள்ளென்று கோபம் வந்தது. இந்த வாத முறையில் கொஞ்சம் கயமை இருக்கிறது. மேலோட்டமாக ஒரு ஒப்பீட்டை செய்து விட்டு, யாராவது கேட்டால் 'மேலோட்டமாகத் தானே செய்தேன்' என்று தப்பிக்கும் முறை.

1. தலித் பிரச்னைகளையும் பிராமணப் பிரச்னைகளையும் ஒரே வாக்கியத்தில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தது போலவும் ஆயிற்று.

2. யாராவது கேட்டால், 'சில பிரச்னைகள் என்று தானே சொன்னேன்' என்று ஒரு வார்த்தைக்குப் பின் ஒளிந்து கொண்டது போலவும் ஆயிற்று.

தலித்துகள் நேற்றும் இன்றும் சந்திக்கும் பிரச்னைகள் மிக ஆழமானவை; பல தளங்கள் கொண்டவை; உளவியல் ரீதியாக பிராமணர் சந்திக்கும் பிரச்னைகளோடு ஒப்பிடவே முடியாதபடி அழுத்தமானவை. பிராமணர்கள் தமது பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்கு வழி வாசல்கள் அநேகம் உண்டு; தலித்துகளுக்கு அவை இப்பொழுது தான் மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவ்விரண்டு பிரச்னைகளையும் ஒரே வாக்கியத்தில் பொருத்திப் பார்ப்பது தவறானதும் உபயோகமற்றதும் ஆகும்.

இன்னமும் இந்த வகையான ஒப்பீட்டில் மீதமிருக்கும் குறைகள் பல. அவை பற்றி எழுதுவதற்கு என்னை விட பொறுமையும் திறமையும் ரோசா வசந்த் போன்றவர்களுக்கு அதிகம் இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

10 Comments:

Blogger PKS said...

As soon as I read it this morning, I thought, this topic is going to be discussed hot in blogworld.

Well, neenga muthalil boni seithu irukireerkal.

Whether writers can attend, jaathi maanadukal is a different question altogether. We have to look into the history and see how it went. For example, I read somewhere Annadurai met Periyar first in Sengunthar jaathi maanaadu in Tirupur or so.

So, one can atleast be ok with Sujatha attending the jaati maanadu and getting some award since its given by someone who appreciates him. I mean, one can justify it.

I am even ok if Sujatha highly thinks of brahmins. Almost in TN now a days talk highly of their caste and heridity. So, I can live with it.

But, after that whatever Sujatha wrote is - like comparing dalits to brahmins - give me a break! Potu thaaka vendiya vishayam thaan. Everyone knows that I am not against brahmins and I oppose brahmins being victimised unfairly, however, comparing them with dalits, what does sujatha mean to say in sub-text.. Dalits have reached the level of brahmins? I dont know.

Another joke is Sujatha choosing Karuthu.com as a site of 2005 last week. Konjam konjamaa Sujatha mela irukira mathipu kurainjute pokuthu. There are so many sites in Tamil. If he wanted he could have atleast given somethin like, best new site or so. But making that website as best site of 2005, well, Sujathaku vayasu aaki pochi :-)

Thanks and regards, PK Sivakumar

January 06, 2006 2:02 PM  
Blogger PKS said...

Read the the line

// Almost in TN now a days talk highly of their caste and heridity. So, I can live with it. //

AS

Almost everyone in TN now a days talk highly of their caste and heridity. So, I can live with it.

Thanks, PK Sivakumar

January 06, 2006 2:06 PM  
Blogger Srikanth Meenakshi said...

PKS,

You are right, Sujatha mixes truths and half-truths in a maddening concoction in this essay.

He is right when he says that Brahmins should not be seen as வந்தேறிகள் or non-Tamils. But he goes totally overboard after that, to the point of making a mockery of the plight of the Dalits.

January 06, 2006 2:19 PM  
Blogger Boston Bala said...

Either he wanted generate buzz or he reciprocated the felicitation :-)))

Sujatha's recent sarukkal seems to be too many?

One of the sample could be listing his production (he didn't even jot his conflict of interest) 'Paandavar Bhoomi' as the 2004 choice.

Similarly, his association with friends made his 2005 list like karuthu.com.

January 06, 2006 3:10 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

ஜாதி மையம் வத்துச் செயல்படும் தலித் அமைப்புகளுக்கெதிராக நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? ஜாதியை மையம் வத்து இயங்குவது சிறந்த வழிமுறையகவே கருதுகிறேன், மக்களை ஒன்று சேர்க்க அது பயன்படும்வரை. ஒருவகையில் 'தமிழன்' என்ற எண்ணமும் ஜாதீய எண்ணம்தான்.

தலித் என்ற சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் என்பதே அர்த்தம். இன்றய நிலையில் பல பிராமணர்கள் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறர்கள். இன்னும் பிராமணர்களை 'மேல் சாதி' என்று கூறிக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது. உங்கள் தழ்ந்த மனப்பன்மையையே அது குறிக்கிறது. மேல் கீழ் என்பது ஜாதி அடிப்படையில் பிராமணர்கள் மத்தியில் இருப்பதாகத் தெரியவில்லை.

நாம் நிமிர்ந்து நடக்கும்போது எல்லோரும் நமக்குச் சமம்தான்.

January 06, 2006 3:51 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

ஜாதி மையம் வத்துச் செயல்படும் தலித் அமைப்புகளுக்கெதிராக நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? ஜாதியை மையம் வத்து இயங்குவது சிறந்த வழிமுறையகவே கருதுகிறேன், மக்களை ஒன்று சேர்க்க அது பயன்படும்வரை. ஒருவகையில் 'தமிழன்' என்ற எண்ணமும் ஜாதீய எண்ணம்தான்.

தலித் என்ற சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் என்பதே அர்த்தம். இன்றய நிலையில் பல பிராமணர்கள் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறர்கள். இன்னும் பிராமணர்களை 'மேல் சாதி' என்று கூறிக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது. உங்கள் தழ்ந்த மனப்பன்மையையே அது குறிக்கிறது. மேல் கீழ் என்பது ஜாதி அடிப்படையில் பிராமணர்கள் மத்தியில் இருப்பதாகத் தெரியவில்லை.

நாம் நிமிர்ந்து நடக்கும்போது எல்லோரும் நமக்குச் சமம்தான்.

January 06, 2006 3:52 PM  
Blogger Yagna said...

நானும் காலையில் படித்தவுடன் பரபரப்பு வேண்டாம்னு இதை பத்தி பதியக்கூடாதுன்னு கஷ்டப்பட்டு விரல்களை அடக்கினேன். குறைந்தபட்சம் இங்கு மறுமொழியாவது இடலாமேன்னு...
பிகேஎஸ் சொல்ற மாதிரி வாத்தியாருக்கு வயசாயிடுச்சி. கடந்த சில வருடங்களாக சறுக்கல்கள் ஏராளம். உலகத்துக்கு அளிக்கவேண்டிய முத்துகளை எல்லாம் கொடுத்துவிட்டார், மிச்சமிருப்பது ஒரு நன்றாக வாழ்ந்த கிழவரின் அகமும் தற்பெருமையும்தானோ என்பது எதாஅ.

January 06, 2006 6:19 PM  
Blogger மரத் தடி said...

முதலில் மறுமொழியினை தமிங்கிலமாக எழுதிய பிகேஎஸ் என்ற அறிவுசீவிக்கு எனது கண்டனத்தை உரித்தாக்குகிறேன்.(இதில் டமிளை வளர்க்க எனி இண்டியன்?!)

முதலில் இந்த ஜாதி, மதம், இனம் என்பது கொடிய நோய் என்று நினைக்கிறேன். இட ஒதுக்கீடுகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். திறமை உள்ளவர்கள் பந்தயத்தில் ஓடிப் பார்க்கட்டுமே? ஒன்று வேண்டுமானால் செய்யலாம்... ஏழைகளுக்கு வேண்டுமானால் இட ஒதுக்கீடு செய்யலாம். இனிமேல் இலக்கியம் படைப்பவர்கள் ஏழை இலக்கியம் என்றும் பணக்காரன் என்றும் இலக்கியம் படைக்கலாம். அங்கே ஜாதீய கூறுகள் மறைக்கப்பட்டு மனிதத்துக்கான எழுத்துக்கள் நிறைந்திருக்கும்!

January 06, 2006 7:56 PM  
Blogger தருமி said...

இப்பதிவிலும், வந்த பின்னூட்டங்களிலும் நான் நூற்றுக்கு நூறு ஒத்துப்போகும் விஷயங்கள்:
1.கற்றவர்கள் இது போன்ற சங்கங்கள் தரும் விருதுகளைப் பெற்றவர்கள் ஆவது பெருமைக்குரிய விஷயமல்ல. - Srikanth Meenakshi

2.Konjam konjamaa Sujatha mela irukira mathipu kurainjute pokuthu - PKS
இந்தச் சறுக்கு அவர் பட உலகத்தில் கால் பதிக்க ஆரம்பித்தபோதே ஆரம்பித்து பாய்ஸ் படத்தில் வேறூன்றியது.

நான் முற்றாக மறுக்கும் பின்னூட்டம் திரு./திருமதி/செல்வி மரத்தடி.

January 07, 2006 12:14 AM  
Blogger நண்பன் said...

The topic is about a subject, which others had understood way back in the history - that Sujatha had lost his touch.

Sujatha had lost his verve as a writer long ago. Many of his writings were mere translations of writers unknown to common readers in the past. The only difference between him and others was his style, which closely followed English masters like Henry, Edgar Allan Poe and others.

He is always superficial in his writings when one takes his கற்றதும் - பெற்றதும். He had never expressed his opinions in concrete terms - and he kept his escape options open always. The compromises he had to make with the film world are another reason why he had to gloss over the issues.

Of late, he tried to get some sort of acceptance from the literary laureates by nose-diving into the world of poems and verses. His audacious stand on மரபுக் கவிதை & புதுக் கவிதை is another issue worthy of discussion. His continuous bashing of the புதுக்கவிதை and its writers exposed his hollowness and bias.

Now he could neither go back to his hardcore fiction days nor merge into the modern literary world. For too long he lived in isolation and now suddenly he wanted to master the literature of the ancient age. Thus, he proved himself that he is not disposed towards the modern world well.

He did not have any other option to get recognised other than by his own community and he grabbed the opportunity as it had come. Still, he was better than S.V.Shekhar and Cho.Ramasamy - who abstained for their own motives.

After all, Sujatha had gathered enough guts to show his true color whereas still lot of human around try to prove that they are secular by staying away from their own people.

Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity.

Thanks and best wishes for the New Year.

(Sorry for writing in English. As some friends may have difficulty in reading Tamil for reasons best known to them. Be a Roman in Rome)

January 07, 2006 10:49 AM  

Post a Comment

<< Home