<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, August 30, 2005

சாருவின் இன்றைய பதிவு

சாரு நிவேதிதா தனது இன்றைய பதிவில், தனது புதிய புத்தக முயற்சிக்கு நிதி ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோளுடன், தனது இத்தகைய வேண்டுகோள்களுக்கு அவர் எதிர்கொள்ளும் எதிர்வினைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

எழுதும் புதிய புத்தகம் வேதங்களைப் பற்றி - இவர் சாதாரணமாக எழுதுவதையே ஒரு வித திகிலோடு தான் படிக்க வேண்டும், வேதங்களை இவர் என்ன புரட்டு புரட்டப் போகிறார் என்பது கொஞ்சம் கலக்கமாகத் தான் இருக்கிறது. இருப்பினும், ஒரே கட்டுரையில் சுய எள்ளல், டாம்பீகம், தன்னிரக்கம், கர்வம் எல்லாமாக எழுதியிருப்பதைப் படித்த போது உண்மையிலேயே பாவமாகத்தான் இருந்தது. இவர் இளையராஜாவைப் பற்றி எழுதியதற்கு ரோசாவசந்தின் எதிர்வினையைப் படித்த போது இவர் மீது எத்தனைக் கோவமாக இருந்ததோ, கிட்டத்தட்ட அதே அளவிற்கு.

கட்டுரையைப் படித்த பின்னர், எப்படி பண உதவி செய்வது என்று கேட்டு ஒரு வரி மின்னஞ்சல் ஒன்று அனுப்பி இருக்கிறேன். முடிந்தால் நீங்களும் செய்யுங்கள்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

8 Comments:

Blogger குழலி / Kuzhali said...

The readers who wish to donate to the charuonline, can send their cheque / DD in favour of:

K. Arivazhagan, ICICI Bank Account No. 602601505045


நன்றி

August 30, 2005 11:13 PM  
Blogger Voice on Wings said...

ஒரு புத்தகத்தைப் புகழும்போது 'un-put-down-able' என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அது போலவே ஒரே மூச்சில் படிக்க வைத்தது நீங்கள் சுட்டிய சாருவின் சமீபத்தியப் பதிவு. அவரது புது முயற்சிக்குப் போதிய ஆதரவு கிடைக்குமென்று நம்புவோம்.

August 31, 2005 1:34 AM  
Blogger ROSAVASANTH said...

//இவர் இளையராஜாவைப் பற்றி எழுதியதற்கு ரோசாவசந்தின் எதிர்வினையைப் படித்த போது இவர் மீது எத்தனைக் கோவமாக இருந்ததோ, கிட்டத்தட்ட அதே அளவிற்கு//

சரியாய் புரியவில்லை. இவர் மீது என்பது யார் மீது? அதே அளவு கோவம் யார் மீது? பெரிய பிரச்சனை இல்லை எனினும் முடிந்தால் விளக்கவும். நன்றி.

August 31, 2005 2:40 AM  
Blogger Jayaprakash Sampath said...

//சரியாய் புரியவில்லை. இவர் மீது என்பது யார் மீது? அதே அளவு கோவம் யார் மீது? பெரிய பிரச்சனை இல்லை எனினும் முடிந்தால் விளக்கவும். நன்றி//

ரோசா : "சாரு , இளையராஜா பற்றி எழுதியதற்கு எதிர்வினையாக ரோசா எழுதிய பதிவைப் படித்த போது, சாரு மீது எத்தனை கோபம் இருந்ததோ அதே அளவிற்கு" என்று நினைக்கிறேன்.

August 31, 2005 2:50 AM  
Blogger ROSAVASANTH said...

// சாரு மீது எத்தனை கோபம் இருந்ததோ அதே அளவிற்கு" என்று நினைக்கிறேன்....//


அதுதானய்யா புரியவைல்லை. அதே அளவு யாருக்கு யார்மீது...?

August 31, 2005 3:40 AM  
Blogger Srikanth Meenakshi said...

குழலி, நன்றி. எனது அஞ்சலுக்கு பதில் வரவில்லையெனினும் உங்கள் தகவலை பயன் படுத்திக் கொள்கிறேன்.

பிரகாஷ், நன்றி.

வசந்த், பிரகாஷ் வாசித்தது போல், எனக்கு சாருவின் மீது எத்தனை கோபம் (உங்கள் பதிவை வாசித்த போது, அவரது சில மேம்போக்குத்தனமான மதிப்பீடுகளை நீங்கள் சுட்டிக் காட்டிய போது) வந்ததோ கிட்டத்தட்ட அதே அளவுக்கு இன்றைய சாருவின் பதிவினைப் படித்த போது சாருவின் மீது இரக்கமும் வந்தது என்ற அளவில் எழுதியிருந்தேன்.

உங்கள் பதிவிற்கும் சாருவின் இன்றைய பதிவிற்கும் பொருளளவில் எந்தப் பொருத்தமும் இல்லை தான். இருப்பினும், ஒரு திறமையுள்ள, பரந்த இலக்கிய அறிவுள்ள தமிழ் எழுத்தாளர் தனது படைப்பிற்காக கையேந்தி நிற்கும் போது, அவரது சமீபத்திய சில (எனது பார்வையில்) தவறுகளையும் மீறி அவர் மீது அனுதாபம் பிறந்தது என்ற அர்த்தம் தொனிக்க எழுதுவதே எனது உத்தேசம்.

August 31, 2005 7:54 AM  
Blogger ROSAVASANTH said...

//...இரக்கமும் வந்தது//

இதுதான் புரியாமல் இருந்தது. நன்றி.

September 05, 2005 3:57 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

வேதங்களைக் குறித்து படிக்க வேண்டுமென்றால் அடையாறு பிரம்மஞான சபை நூலகம் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும். ஜம்புநாதன் மொழிபெயர்த்ததைச் சென்னையில்
தேடிக்கண்டுபிடிப்பதும் கடினமல்ல.கி.அ.சச்சிதானந்தன் அல்லது பெ.சு.மணி போன்றோர்
உதவக்கூடும். எனவே சாரு எழுதியுள்ளதைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது.

ஒரு திறமையுள்ள, பரந்த இலக்கிய அறிவுள்ள தமிழ் எழுத்தாளர் - hype

September 05, 2005 7:00 AM  

Post a Comment

<< Home