கிரிக்கெட்: விதி செய்த சதி!
ஜிம்பாப்வேயில் நடந்த 'Videocon' கோப்பைப் போட்டியில் இந்தியா இன்று நியூசிலாந்திடம் கோலாகலமாகத் தோற்றிருக்கிறது. முதலில் ஆடிய நியூசிலாந்தை 36-5 என்ற நிலையிலிருந்து மீண்டு 215 ரன் வரை எடுக்க அனுமதித்தது. பின்னர் வேகப்பந்து வீச்சாளர் பாண்ட்-இன் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாது 44-8 என்ற படு கேவலமான நிலையிலிருந்து 164 ரன் வரை தட்டுத்தடுமாறி வந்து 'பிரயாணக் களைப்போடு ஆடியதற்கு இதுவே அதிகம்' என்று முடிவு செய்து, ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
பதிவு இத்தோல்வியைப் பற்றியது அல்ல (ஒவ்வொரு ஆட்டத்திற்கும் அழகான விவரணையோடு, சுவையான நடையில் பதிவெழுத, நானென்ன அந்த காலத்து பத்ரியா? :-) ).
இந்தப் போட்டி இந்தியா முதல் முறையாக கிரிக்கெட்டின் புதிய சூப்பர் சப் (Super Sub) விதியின் கீழ் ஆடிய போட்டியாகும். இந்த விதி சில மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டு சில ஒருநாள் போட்டித்தொடர்களில் (சமீபத்திய இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர் துவக்கமாக) பயன்பாடில் உள்ளது. இது ஒரு உருப்படாத விதி. ஆட்டத்தின் அடிப்படைத் தன்மையை சமச்சீரில்லாத வகையில் பாதிக்கும் விதி என்று நியூசிலாந்து அணித்தலைவர் ஸ்டீபன் ஃப்ளெமிங் சொன்னதை வழிமொழிகிறேன்.
முதலில் விதி என்ன என்று பார்ப்போம். இந்த விதி ஒரு அணி தனது உறுப்பினர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவே ஒரு முறை மாற்றிக் கொள்ள அனுமதிக்கிறது. அதாவது ஒரு அணியில் பதினோரு பேர் என்றால், அந்த அணி ஆட்டம் துவங்குவதற்கு முன் (டாஸ் போடுவதற்கும் முன், இது முக்கியம்), உபரியாக ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும். ஆட்டத்தின் எந்தத் தருணத்திலும் பதினோரு பேரிலிருந்து ஒருவரை நீக்கி விட்டு அந்த உபரி ஆட்டக்காரரைச் சேர்த்துக் கொள்ளலாம். அப்படி சேர்த்துக் கொண்டு விட்ட பின்னர் அந்த மாற்றத்தைத் திருப்ப (reverse) முடியாது. அதாவது, ஒரு முறை மாற்றலாம், அதன் பின்னர் மாறியது மாறியதுதான்.
இந்த புதுவிதியின் பின்னால் என்ன எழவெடுத்த லாஜிக் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், இந்த விதியில் உள்ள ஒரு பெரும் குறைபாடு தெளிவாகத் தெரிகிறது. டாஸ் போடுவதற்கு முன்பே பனிரெண்டாவது ஆட்டக்காரர் தேர்ந்தெடுக்கப் படவேண்டி உள்ளதால், எந்த அணியும் இந்த விஷயத்தில் சரியான முடிவெடுக்க முடியாது. உதாரணமாக, பதான் பனிரெண்டாவது ஆட்டக்காரர் என்று வைத்துக் கொள்வோம். இந்தியா டாஸில் ஜெயித்து முதலில் மட்டை பிடித்ததென்றால் லட்சுமண் பேட் செய்ய முடியும். பின்பு, லட்சுமணிற்கு பதில் பதான் வந்து பிற்பாதியில் பந்து வீச முடியும். ஆனால், இந்தியா முதலில் பந்து வீச வேண்டியிருந்தால்? பதானை பந்து வீச அழைத்தால், அவர் தான் (லட்சுமணிற்கு பதில்) மட்டையடிக்கவும் வேண்டும்.
அதாவது, டாஸில் ஜெயிக்கும் அணி தனது பனிரெண்டாவது ஆட்டக்காரரின் தன்மையைப் பொறுத்து முதலில் பேட் செய்யவோ, பந்து வீசவோ முடிவு செய்ய இயலும். டாஸில் தோற்கும் அணி பின்பாட்டுப் பாட வேண்டியது தான்.
இதுவும் தவிர, இந்தப் புதிய விதி, பேட்டிங், பவுலிங் என்று சிறப்பு ஆட்டக்காரர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறதே ஒழிய, ஆல்ரவுண்டர்களை (utility players) ஊக்குவிப்பதில்லை.
ஒரு கிரிக்கெட் அணியில் பதினோரு ஆட்டக்காரர்கள் தான் உண்டு. பனிரெண்டாவது ஆட்டக்காரரும் ஆட்டத்தில் சேர்த்தி என்றால், தண்ணீர் கூஜாக்களை தூக்குவது யார்? :-)
இன்றைய ஆட்டத்தில், நியூசிலாந்தின் பனிரெண்டாவது ஆட்டக்காரர் பாண்ட் - ஆறு விக்கெட் எடுத்து இந்தியாவை நிலைகுலையச் செய்தார். இந்தியாவின் பனிரெண்டாவது ஆட்டக்காரர் வி.ராவ் - முதல் பந்தில் போல்டு! இந்த விதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
3 Comments:
பேஸ்பால் மாதிரி பத்து மட்டையடி வீரர்கள், பத்து பந்து வீச்சாளர்கள் (ஒரேயொரு விக்கெட் கீப்பர்) வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
ஆல்ரவுண்டர்கள் என்பது தனி மனிதத் துதிக்கு வழிவகுக்கும் :-P ;-) டி. ராஜேந்தர் போல் எல்லாரும் நானே பத்து ஓவர் போடுவேன்; நானே ஆட்டத்தைத் துவக்குவேன் என்று பெரிய ஆளாகி விடுவார்கள் :)
விளாசுவதற்கு ஐந்து பேட்ஸ்மேன். துவக்க ஆட்டக்காரர்கள் இருவர். நின்று நிதானித்து ஆட்டத்தை வழிநடத்த மூவர்.
ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், லெக் ப்ரேக், சூப்பர் ஃபாஸ்ட், சூப்பர் ஸ்லோ (ரவி சாஸ்திரி ;) என ரகம் ரகமாக பத்து பௌலர்கள்.
இந்தியாவில் இருக்கும் திறமைக்கு ஏற்ற மாதிரி 25 வீரர்கள் கொண்ட அணி தேர்ந்தெடுக்கலாம்.
Did we lose so badly because of the new RULE ?????? Come on !!!
Actually I am glad that we lost (so badly) !!!!! It was atrocious to have replaced Dravid as captain for this tour, in the first place, after a single tournament. What do these selection committee jokers and that arrogant Dalmiya think of themselves ? This business of politics of BCCI really stinks !!!!
If this tour ends the captaincy of that "Calcutta" Tiger (rather cat!!), it will be really good. Why should Drvaid be not given a fair chance to show his captaincy skills ? Should Dravid not nurture an ambition to captain the country considering his magnificient contribution to Indian cricket ? Ganguly has done his bit and so let him go.
Anyway, Ganguly has just been a passenger in the test team for quite sometime now, though I believe he is still a good ODI player.
மாறிய விதிகளைப் பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன், ஒரு மாதப் பத்திரிகைக்காக. அந்தக் கட்டுரை வெளியானதும், வலைப்பதிவில் சேர்க்கிறேன்.
Post a Comment
<< Home