<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, August 23, 2005

இரண்டு பாடல்கள்

நேற்றும் இன்றும் இரண்டு பாடல்கள் முதல் முறையாகக் கேட்டேன்.

1. இந்தப் பாடலை சென்ற வார சப்தஸ்வரங்களில் ஒரு கல்லூரி மாணவர் மிக நேர்த்தியாகப் பாடினார். 'தேசம்' படத்திலிருந்து ('Swades' இன் தமிழாக்கம்), 'உந்தன் தேசத்தின் குரல்...'. ஏ.ஆர்.ரஹ்மான் அருமையாகப் பாடியிருக்கிறார். பாடலின் இசையும் (ஹிந்தியில் ஏற்கனவே கேட்டிருந்தாலும்) வரிகளும் ஒன்றோடொன்று மிக அழகாக இயைந்திருக்கின்றன. பாடலின் ஆரம்ப வரிகள்:

'உந்தன் தேசத்தின் குரல்...
தொலை தூரத்தில் அதோ...
செவியில் விழாதா...

சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா...

அந்த நாட்களை நினை...
அவை நீங்குமா உனை?
நிழல் போல் வராதா?

அயல் நாடுந்தன் வீடல்ல, விடுதியடா தமிழா...'

எழுதியது யாரென்று தெரியவில்லை, DiamondPearl-ஆக இருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்.

Music India Online-இல் பாடல்

2. 'கண்ட நாள் முதலாய்' படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா இசையில், 'கண்ட நாள் முதலாய்..' என்ற கர்நாடக சங்கீதக் கீர்த்தனைப் பாடல். அதிகம் உறுத்தாத டிரம்ஸ் மற்றும் புல்லாங்குழல் பின்னணியோடு சுபிக்ஷாவும், பூஜாவும் பாடியுள்ள பாடல். மதுவந்தி ராகத்தில் அமைந்த இப்பாடல் உங்களுக்கு இனிமையான் வேறு சில பாடல்களை - 'நந்தா நீ என் நிலா', 'என்னுள்ளில் ஏதோ...' - நினைவுபடுத்தும்.

Music India Online-இல் பாடல்
இப்பாடல் வயலின் இசையாக
tfmpage.com-இல் ராக விவரங்கள்

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

4 Comments:

Blogger Thangamani said...

இந்த இரண்டாவது பாடல் எனக்குத்தெரிந்த இன்னொரு பாடலை நினைவுபடுத்தியது. பாடல் மட்டும் வரவில்லை. 'நந்தா நீ என் நிலா', 'என்னுள்ளில் ஏதோ' இடம் பெற்ற படத்தின் பெயரைச் சொல்லமுடியுமா?

இந்த பாடலுக்கு நன்றி!

August 23, 2005 8:25 PM  
Blogger Srikanth Meenakshi said...

நந்தா நீ என் நிலா பாடலின் படம் பெயரும் அது தான் - நந்தா நீ என் நிலா. என்னுள்ளில் ஏதோ, ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று நினைக்கிறேன்.

நன்றி

August 23, 2005 8:33 PM  
Blogger rajkumar said...

என்னுள்ளில் ஏதோ- ரோசாப்பூ ரவிக்கைக்காரி-சரிதான்.

அன்புடன்

ராஜ்குமார்

August 23, 2005 11:48 PM  
Blogger Srikanth Meenakshi said...

//அது வாலி எழுதின பாடலய்யா//

நிஜம்மாவா? ஆச்சரியப்படுகிறேன் :)

August 24, 2005 9:02 AM  

Post a Comment

<< Home