<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Monday, August 22, 2005

முடிவு சரி, காரணம் தவறு.

கொல்கொத்தாவில் தீயணைப்புப் படையில் பெண்களும் சேர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படப் போகிறார்கள் என்று செய்தி வந்துள்ளது. காவல்துறையில் பெண்போலீசார் போல. இதுவரையில் தீயணைப்புப் படைகளில் பெண்கள் இல்லை என்ற விஷயமே எனக்கு இப்பொழுதுதான் உறைக்கிறது. அந்த நிலையை முன்னேற்றும் வகையில் இது நல்ல செய்திதான்.

ஆனால், இந்த மாற்றத்திற்கான காரணம் தான் கொடுமையாக இருக்கிறது. சமீபத்தில் கொல்கொத்தாவில் நிகழ்ந்த தீவிபத்து ஒன்றில் ஒரு முஸ்லிம் பெண்மணியை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர்கள் மக்களால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் (நன்றி: ராமாநந்த சென்குப்தாவின் வலைப்பதிவு). காரணம், ஆண் வீரர்கள் ஒரு பெண்மணியை தொட்டுத் தூக்கக் கூடாது என்பதால். இது போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக, கொல்கொத்தா தீயணைப்புப் படை பெண்களைச் சேர்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் இது போன்ற பிரச்னைகளுக்கு இது ஒரு தீர்வு போலத் தோன்றலாம். ஆனால், நொடி நேரங்களில் முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் ஆண்-பெண் பால் வேற்றுமைகள் பார்த்துக் கொண்டிருப்பது சாத்தியமா? ஒவ்வொரு விபத்திற்கும் ஒரு பெண் வீரரும் அனுப்பப்படுவாரா? எரிந்து கொண்டிருக்கும் பெண்மணியைப் பார்த்தால், ஒரு ஆண் வீரர் ஒன்றும் செய்யாமல் வெளியே வந்து பெண் வீரருக்குச் சொல்லி அனுப்ப வேண்டுமா?

அபாயச் சூழல்களில் எப்படி நடக்க வேண்டும் என்று விதிமுறைகள் வகுப்பவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை, அந்த விதிமுறைகள் எளிமையாக, யோசிக்காமல் பின்பற்றக் கூடியவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது. ஆணுக்கு ஒரு விதி, பெண்ணுக்கு ஒரு விதி என்றெல்லாம் நிர்ணயிப்பது மடத்தனமானது.

மேலும், மேற்கூறிய சம்பவத்தில், வீரர்களைத் தடுத்த மக்களை 'negligent homicide' என்று சொல்லி உள்ளே தள்ள வேண்டாம்?

தீயணைப்பு விரர்களாக பெண்கள் பணிபுரிவது வரவேற்கப்படவேண்டியது, சந்தேகமில்லை. ஆயினும் இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மகிழ்ச்சிக்கு பதில் வருத்தத்தையே அளிக்கிறது.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

1 Comments:

Blogger வானம்பாடி said...

அடக் கொடுமையே! "நீ செத்தாலும் செத்துப் போ, உன்னை ஒரு ஆண் தொட்டுவிடக் கூடாது" என்பது எவ்வளவு காட்டுமிராண்டித்தனம்.. மக்களுக்காக மதமா, மதங்களுக்காக மக்களா..

August 23, 2005 2:59 AM  

Post a Comment

<< Home