<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Wednesday, September 14, 2005

நியூயார்க் டைம்ஸ் - கட்டணப் படிப்பிடம்?

நியூயார்க் டைம்ஸின் வலைத்தளத்தில் இன்று ஒரு ஏமாற்றமளிக்கும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி, தலையங்கமில்லாத கருத்துப் பத்திகள் (Op-ed columns), விளையாட்டு, வர்த்தகம், நியூயார்க் நகரச்செய்திகள் ஆகியவற்றை, வரும் திங்கள் முதல் வருடம் $50 சந்தா கொடுப்பவர்கள் மட்டுமே படிக்க இயலும். ஏமாற்றமளித்தாலும், சில மாதங்களாகவே, ஒரு கட்டுரையை ஒரு சமயத்தில் இவ்வளவு பேர் தான் வாசிக்கலாம் என்பது போன்ற கட்டுப்பாடுகளை இந்த வலைத்தளம் பரிசோதித்துக் கொண்டிருந்ததால், இந்த அறிவிப்பு பெரிய ஆச்சரியமளிக்கவில்லை.



வர்த்தகச் செய்திகளுக்கு இதர பல ஊடக வாயில்கள் உள்ளன; விளையாட்டுச் செய்திகள் டைம்ஸை விட New York Post மற்றும் New York Daily news-இல் இன்னும் கலகலப்பாக இருக்கும். நியூயார்க் நகரச் செய்திகள் பற்றியும் எனக்குக் கவலையில்லை. ஆனால், தாமஸ் ஃப்ரீட்மேனின் மிதவாதமான அரசியல் பத்திகள், நிக்கலஸ் க்ரிஸ்டாஃப் மற்றும் பால் க்ருக்மேனின் கருத்துக்கள், சல்மான் ருஷ்டி அவ்வப்போது எழுதும் கட்டுரைகள், இவை எல்லாவற்றையும் விட மௌரீன் டௌட், புஷ்ஷை விமரிசித்து எழுதும் அட்டகாசமான நக்கல் கட்டுரைகள் ஆகியவற்றின் இழப்பு வருத்தமளிக்கிறது. இவை சுவையாக இருந்தாலும் காசு கொடுத்துப் படிக்க வேண்டிய அளவு அத்தியாவசியமாக இல்லாததால் அவற்றை இனி படிக்க இயலாது.

மேலும், இது இந்த வலைத்தளத்தின் 'சீரமைப்பில்' ஒரு ஆரம்பமே என்ற தொனியில் இந்த அறிவிப்பு உள்ளது. அதாவது இதற்கு எப்படி வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து, மெள்ள மெள்ள முழுத்தளமும் ஒரு சந்தாத் தளமாக மாறலாம்.

இது அமெரிக்க உள்நாட்டு வாசிப்பை விட, சர்வதேச வாசிப்பை வெகுவாக பாதிக்கும். இது வெற்றி பெற்றால், வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளும் சந்தேகமில்லாமல் இம்முறையைப் பின்பற்றும்.

மாற்றுக் கருத்துக்களையும், ஆரோக்கியமான விவாதங்களையும் முன்வைக்கும் பத்திகள் சென்றடையும் வாசக வட்டம் சுருங்குவது ஆரோக்கியமான விஷயமில்லை.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

5 Comments:

Blogger பரி (Pari) said...

May be the cost will come down later(hopefully). But this move is not surprising at all. The WSJ took this root long time ago.

September 15, 2005 9:23 AM  
Blogger Jayaprakash Sampath said...

அமெரிக்க நாளிதழ்களின் விலை விவரம் அவ்வளவாகத் தெரியாது என்றாலும், ஐம்பது டாலர் என்பது அதிகம் என்று தான் நினைக்கிறேன். எடுத்த எடுப்பிலே அதிகக் கட்டணம் வைத்து , விரும்பி வாசிப்பவர்களை பயந்து ஓடச் செய்வது ரொம்ப மோசமான மாடல். அதிகமாக இருக்கிற ரீடர்ஷிப்பை encash செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதியிருந்தால், இன்னும் smart ஆக செய்திருக்கலாம். முன்பு அடிக்கடி NYT சுட்டிகள் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும். அதுக்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். நல்லா இருந்தா சரிதேன் :-)

September 15, 2005 9:38 AM  
Blogger Boston Bala said...

Thanks for the alert.

நி.யா.டைம்ஸில் இருந்து தினசரி செய்தி-மடல் வந்து கொண்டிருந்தாலும், இந்த அறிவிப்பை கவனிக்கவில்லை! மிகவும் பயனுள்ளதாக இருந்த TimesSelect: NewsTracker-ஐ கட்டண சேவையாக்கினார்கள். இந்தியா, மைக்ரோசாஃப்ட் என்றெல்லாம் விதவிதமாய் வந்து கொண்டிருந்த உஷார் மடல்களை, யாஹுவிற்கும் இன்ன பிற இடங்களுக்கும் ஜாகை மாற்றிக் கொண்டேன். இப்பொழுது பால் க்ரூக்மேனையும், தலையங்கத்தையும் படிக்க/blog முடியாது.

New York Times Company: Investors: Circulation Data பார்த்தால் வழக்கம் போல் விளம்பரத்தின் மூலம்தான் 67% வருமானம் வருகிறது. ஆனால், இணையத்தில் இலையுதிர் காலத்திற்கு அழைப்பாக, நாகரிக புத்தாடைக்கு ரால்ஃப் லாரென் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தது. நாலைந்து தடவை sneering பார்வையுடன் மாடல்கள் அழைத்தாலும், நான் ஒரு தடவை கூட க்ளிக் செய்து உள்ளே செல்லவில்லை. (வாங்குவது என்பது வேறு விஷயம் ;-) கிளிக்-த்ரூ கூட கிடைத்திருக்காது!)

--TimesSelect will be free for home delivery subscribers to the newspaper---

OCDக்கு உட்பட்டவன் போல் தினமும் காலையில் 'பாஸ்டன் க்ளோப்' படிக்கும் போது தோன்றும் வயிற்றெரிச்சலுக்கு நல்ல வடிகால் ;-))

மாதம் இருபது டாலர் தண்டம் கட்டாமல், இணையத்திலேயே இலவசமாகப் படிக்கலாமே என்று அரித்துக் கொண்டேயிருக்கும். Ratpack போல் படிக்காத பேப்பர், மொழிபெயர்த்து (:P) படுத்த வேண்டிய மேட்டர், சிறப்பு இதழ், என்று கொஞ்சம் சேமித்து பத்திரமாக ஒரு வருடம் கழித்துத் தூக்கி வேறு போடும் வழக்கம். இப்பொழுது ஜென்ம சாபல்யமாய் இணையத்திலோ, அச்சிலோ படிப்பதற்கு பணம் கேட்கிறார்கள்.

இலவசமாகக் கொடுப்பது நூலகங்களுக்குப் பொருத்தம். பங்குச்சந்தையில் புழங்குபவர்களுக்கு எதிலும் காசு; எப்பொழுதும் லாபநோக்கு?

டைம்ஸ் வெற்றியடைந்தால், நம்ம ஊரு தினகரன்களும் இதே மாடலை பின்பற்றி காசு கேட்க வாழ்த்துகிறேன்.

September 15, 2005 11:55 AM  
Blogger Srikanth Meenakshi said...

BB, I can't imagine why you would go about *welcoming* this change...I mean, stuff you were getting for free till yesterday costs you money today! I am not questioning NYT's right to do this or their business prerogatives, but as a consumer/reader I am saddened and think its consequences would be undesirable.

Prakash is right in saying that this could have been done smarter. People don't go to NYT for news, they can get it from AP/reuters. They go there for opinion and essays, and now, thanks to this, people will stop going there altogether.

Unlike WSJ, which provides news about specific domain and is of a narrow interest-base (an affluent one at that), NYT is more broad-based and is not irreplaceable in its domain. I mean, Slate's opinions pieces are most of the times as good if not better than NYT's and as such, my prognostication for NYT's attempt is not very bright.

Sorry for the English, typing during a break in a training session...

September 15, 2005 2:06 PM  
Blogger Boston Bala said...

--stuff you were getting for free till yesterday costs you money today--

பாவம்... தாமஸுக்கும், மௌரீனுக்கும் அவர்கள எப்படித்தான் காசு கொடுப்பது?

--- NYT is more broad-based and is not irreplaceable ---

ஆமாம். ஹஃபிங்டன் போஸ்ட், வலைப்பதிவுகள் என்று கிட்டத்தட்ட அதே அளவு செறிவுள்ள இடங்கள் ஏராளம். இருந்தாலும் ம்யூச்சுவல் ஃபண்ட் உபயோகிப்பவர்கள் பெரும்பாலும் மார்னிங்ஸ்டாரை நாடுகிறார்கள். அதே போல், செய்திகளைக் கோர்வையாக அறிய விரும்பும் புதுசுகள் டைம்ஸை மட்டுமே நாடலாம்?

--people will stop going there altogether. ---

டைம்ஸுக்கு இதனால் பெரிய நஷ்டம் இருக்கப் போவதில்லை. இணையத்தில் கூகிளும் யாஹுவும்தான் விளம்பரம் மூலம் குறிப்பிடத்தக்க வருவாய் ஈட்டுகிறது. படிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், வருவாய் அதிகரிக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

கூகிளுக்கு இணையாக அபவுட்.காம் போன்றவற்றை டைம்ஸ் முன்னிறுத்தலாம்.

September 15, 2005 3:26 PM  

Post a Comment

<< Home