குஜராத்தில் ஒரு தமிழ்த் திரைப்படம்
விசித்திரமான செய்தி ஒன்று கண்ணில் பட்டது; அமெரிக்காவில் 'Only in America' என்று சில செய்திகளைப் பிரகடனப் படுத்துவார்கள், அது போல் இதை 'Only in India' என்று சொல்லலாம்.
குஜாராத்தில் ஒரு பத்தொன்பது வயது பெண்ணும் ஒரு பத்தொன்பது வயது பையனும் காதலிக்கிறார்கள். பெண் வீட்டில் இதற்கு எதிர்ப்பு வரவே, இருவரும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார்கள். ஆனால், குஜராத்தில் ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள சட்டப்படி இருபத்தியோரு வயது ஆகியிருக்க வேண்டும். இவர்களுக்கு இரண்டு வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஓடிப்போய் ஒளிந்து வாழ்வதற்கும் மனம் (பணமும் என்று நினைக்கிறேன்) ஒப்பவில்லை. ஆதலால், ஒரு நூதனமான வழி கண்டு பிடித்திருக்கிறார்கள். இதன்படி பெண் பையனின் மூத்த சகோதரனைத் திருமணம் செய்து கொண்டு பையன் வீட்டில் இருப்பது, இரண்டு வருடங்கள் கழித்து அவனை விவாகரத்து செய்து விட்டு இளையவனைத் திருமணம் செய்து கொள்வது. மூத்தவனும் இதற்கு (ஒப்பந்தக் கையெழுத்தோடு) சம்மதிக்க, திருமணம் நடந்திருக்கிறது.
செய்தி இங்கே.
அடுத்த 'வித்தியாசமான காதல் கதைக்கு' கரு தேடிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைக்கதாசிரியர்களுக்கு இந்தச் செய்தி ஒரு லாட்டரிப் பரிசிற்கு சமானம். ஒரு தமிழ் வெற்றிப் படத்தின் சகல சாமுத்திரிகா லட்சணங்களுடனும் கூடிய ஒரு கதை, இந்தச் செய்தியை கொஞ்சம் நீட்டித்தால் உருவாகிறது. கீழ்க்காணும் One-liner-கள் தம்மைத் தாமே எழுதிக் கொண்டன.
1. பெண்ணும் இளையவனும் ஒரு மேகங்கள் மிதக்கும் மலைப்பிரதேசப் பள்ளியில் படிக்காமல் காதலிக்கிறார்கள்.
2. பாடிக் களைத்த பின்னர் ஓடிப் போகிறார்கள்.
3. ஒரு தடித்த கண்ணாடி தாலுக்கா ஆபீஸ் குமாஸ்தா சட்டத்தை விளக்குகிறார்.
4. சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்ப வருகிறார்கள்.
5. பெண்ணால் வீட்டுக்குத் திரும்ப முடியவில்லை, பையன் வீட்டில் கல்யாணமாகாத பெண்ணை வீட்டில் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள்.
6. அண்ணன் ஐடியா கொடுக்கிறான்.
7. திருமணம்
இடைவேளை.
8. குடும்பம் நடத்தத் துவங்கிய உடன் இளையவனின் குறைகள் பெண்ணிற்குத் தெரிய ஆரம்பிக்கின்றன.
9. அண்ணன் பொறுப்புடன் குடும்ப பாரத்தைச் சுமக்கிறான், தம்பி ஊதாரியாக ஊர் சுற்றுகிறான்.
10. பெண்ணிற்கு கொஞ்சம் கொஞ்சமாக அண்ணனின் மீது ஈர்ப்பு வருகிறது (இந்த இடத்தில் 'பனி விழும் இரவு, நனைந்தது நிலவு' என்று ஒரு பாட்டு வைக்கிறோம்)
11. தம்பிக்கும் அண்ணனுக்கும் சண்டை வருகிறது, பெண் அண்ணனுக்குப் பரிந்து பேசுகிறாள்.
12. தம்பி அண்ணனை சந்தேகிக்கிறான், தம்பி கன்னத்தில் அண்ணன் ஒரு 'பளார்'.
13. காலண்டரில் நாட்கள் கிழிக்கப் படுகின்றன.
14. இரண்டு வருடங்கள் முடியும் நாளில் அண்ணனைக் காணவில்லை, அவன் கையெழுத்தோடு விவாகரத்து பத்திரம் வீட்டில் இருக்கிறது.
15. தம்பி பெண்ணை அவளது தாலியைக் கழற்றித் தூக்கிப் போடும்படி சொல்கிறான். பெண்ணின் முகம் குளோசப். கட்.
16. ரயில் நிலையத்தில், வேண்டாம், பஸ் நிலையத்தில் அண்ணன் உட்கார்ந்திருக்கிறான். பஸ் கிளம்பப் போகிறது. தூரத்திலிருந்து பெண் ஓடி வருகிறாள், இவனருகே வந்து நிற்கிறாள், விவாகரத்துப் பத்திரத்தை கிழித்துக் கையில் கொடுக்கிறாள். சுபம்.
அதாகப்பட்டது யாதெனில், இந்தக் கதைக்கு நான்தான் காப்பிரைட்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
9 Comments:
சூஊஊஊஊஊஊஊஊஊப்பர்!!!!!!
வாழ்த்துக்கள்.
முதல் வாழ்த்து நாந்தான் . நினைவிருக்கட்டும். ஒருவேளை நிஜமாவே சினிமாவா எடுதுட்டா, காசு வருமில்லே அதுலே எனக்கும் ஒரு பங்கு?
ரெண்டாவது வாழ்த்து என்னோடது. எனக்கும் பங்கு குடுத்துருங்க. :-)
கலக்கல் ஸீர்காந்த்
ஊருக்கு போய் ஓர் படம் எடுத்து பார்த்து விடுவோமா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
12 ஆவது சீனையும், 13ஆவது சீனையும் மாத்திப்போட்டு படம் எடுத்தா உங்க காபிரைட் என்ன செய்ய முடியும்?
are such contracts legally valid.can one marry with an undertaking to divorce, particularly under hindu law.even it it was a registered marriage such a contract may be void abinitio.i dont know the exact legal position.
நாலாவது வாழ்த்து என்னுடையது அதனாலே நாலில் ஒரு பங்கு காசு கொடுங்க என்றெல்லாம் கேட்க மாட்டேன். ;O)
வந்து, யாரை நடிகர்களாப் போடலாம்?(அதாவது 45 வயசைக் கடந்தும் கல்லூரி மாணவராய் நடிக்கத் தலைப்படும் "போன தலைமுறை"யைத் தவிர)
An "Close Up"(EEEEEEE) look about Tamil Cine'ma(d) Industry.
Keep it up!
துளசி, பரணீ, ஷ்ரேயா...வளர்த்து விட்ட உங்களையெல்லாம் மறப்பேனா? படம் ரிலீஸ் ஆன அன்று உங்களுக்கெல்லாம் தலைக்கொரு கிலோ அல்வா, கண்டிப்பாக.
சுரேஷ், உமக்கெல்லாம் ஒரு தனி லீகல் சிஸ்டம் இருக்கு, ஓய்...அபு தாபி வந்து உம்மை....
ரவி, நீங்கள் ரொம்ப யோசிக்கிறீர்கள்...
ஸ்ரீகாந்த் அவர்களே, உங்கள் சன்டே ஸ்பெஷல் படித்துக் கொண்டிருந்தேன்...எதேச்சையாக இந்தப் பதிவு கண்ணில் படவே...வந்து படித்தேன்...
ஆனாலும் ஒண்ணுங்க...நம்ம ஊர்ல தாலி செண்டிமெண்ட் மட்டும் என்னைக்குமே ஸில்வர் ஜூப்ளி தானுங்க...(குறைந்த பட்சம், போட்ட பணத்தெ எடுத்துருவாய்ங!!)
வஜ்ரா ஷங்கர்.
Post a Comment
<< Home