<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, September 04, 2005

இரண்டு படங்கள்

வார இறுதியில் இரண்டு படங்கள் பார்த்தேன்.

சர்க்கார்(ஹிந்தி)

பார்க்காதீர்கள். கடி. நேர விரயம்.

படத்தின் ஆரம்பத்திலேயே 'இது Godfather படத்திற்கு எனது புகழாரம்' என்று இயக்குனர் சொல்லி விடுவதால், கதை திருடப்பட்டது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆங்கில மூலத்தில் Godfather-க்கு மூன்று புதல்வர்கள் - ஒருவன் முரடன், அடுத்தவன் சாதுர்யன், மூன்றாமவன் துரோகி. சர்க்காரில் இரண்டு புதல்வர்கள் - முதலாமவன் முரடன் + துரோகி, இரண்டாமவன் சாதுர்யன். எதிர்கட்சிகளோடு சேர்ந்து முதலாமவன் செய்யும் சூழ்ச்சியை இன்னொரு பையனும் அப்பனும் சேர்ந்து எப்படி முறியடிக்கிறார்கள் என்பது கதை.

1. அமிதாப் தான் godfather. இவர் குரலில் இருக்கும் Gravitas, இவரது உருவம் மற்றும் உடல் மொழியில் இல்லை. இவரது கதாபாத்திரமும் அடிப்படையில் சரியாக நிறுவப் படவில்லை. 'எத்தனை தாதா படம் பார்த்திருக்கிறார்கள், இவர்களுக்குத் தெரியாதா...' என்று பார்ப்பவர் மீதிருக்கும் நம்பிக்கையில் எடுக்கப்பட்டார் போல் இருக்கிறது.

2. ஏகப்பட்ட Clicheக்கள் படம் முழுவதும். படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு ஏழைத் தகப்பன் தனது பெண் ஒரு பணக்கார வாலிபனால் கற்பழிக்கப்பட்டதாக புகார் கொடுக்கிறார். அடுத்த காட்சியில் அவனது தேக ஆரோக்கியம் குறைக்கப் படுகிறது. இப்படித் துவங்குகிறது ஒரு நீண்ண்ண்ண்ண்ட cliche ஊர்வலம்.

3. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு ஆலாபனை. ஒரு காட்சியில் வசனமோ, நிகழ்வோ துவங்குவதற்கு முன்னால், அது நடக்கும் இடம், தட்ப வெட்ப சூழ்நிலை, அருகில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள், அங்கு நடக்கும் ஆடு மாடுகள் என்று சகலத்தையும் காட்டி விடுகிறார்கள். காட்சி முடிந்த பிறகு 'இதற்காடா இந்த அலம்பு அலம்பினீர்கள்?' என்று கேட்கத் தோன்றுகிறது.

4. வில்லன்கள் சாகப் போவது நமக்கு முன்னால் அவர்களுக்கே தெரிந்து விடுகிறது. 'சர்க்கார் என்ன சும்மா விடமாட்டான்' என்று சொன்ன அடுத்த சில காட்சிகளில் ஃபணால்.

5. அபிஷேக் பச்சன் Michael Corleone மாதிரி இல்லை; பக்கத்துத் தெருவில் இருக்கும் முரளி மாதிரி இருக்கிறார்.

6. இசை பயங்கர காமெடி. எதற்கெடுத்தாலும் தடாலடியாக பின்னணி இசை வருகிறது. எட்டாங்கிளாஸ் பரிட்சையில் தப்பு தப்பாய் விடை எழுதி விட்டு, அழகாய் இருக்க வேண்டும் என்பதற்காக, எல்லா வரிகளையும் ஸ்கேல் வைத்து அண்டர்லைன் பண்ணியது தான் நினைவுக்கு வருகிறது.

இவற்றினாலும், 'நாயகன்' படத்தின் அருமை இப்படத்தைப் பார்க்காமலேயே தெரியும் என்பதாலும், இந்தப் படத்தை, like I said, பார்க்காதீர்கள், நேர விரயம்.

2. The Constant Gardener

இந்த ஊரில் புதுப்படம். Ralph Fiennes, Rachel Weisz நடித்த John Le Carre எழுதிய நாவலின் அடிப்படையிலான படம். சுருக்கமான கதை தான். கென்யாவில் இங்கிலாந்தின் தூதரகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் மனைவி, மர்மமான முறையில் இறக்கிறார். அந்த மரணத்தின் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சியை அந்த அதிகாரி கண்டறிவது தான் கதை. கதையில் ஒரே குறை என்னவென்றால், இந்த சூழ்ச்சி அந்த அதிகாரிக்குப் புரிவதற்கு ரொம்ப நேரம் முன்னாலேயே நமக்குப் புரிந்து விடுகிறது. ஆதலால், மர்மத்தில் மர்மமில்லை.

ஆயினும், படத்தின் சுவை குன்றாததற்குக் காரணம், இந்தக் கதையை, ஆப்பிரிக்காவின் இன்றைய சூழ்நிலையைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்குப் பயன்படுத்தியிருப்பதுதான். குறிப்பாக சர்வதேச நிதி நிறுவனங்களும், மருந்து கம்பெனிகளும் எப்படி ஆப்பிரிக்காவைப் பரிசோதனைக் களனாகப் பயன்படுத்தி வருகின்றன என்பதை பட்டப் பகலின் வெட்ட வெளிச்சத்திற்கு இந்தப் படம் கொண்டு வருகிறது. 'இந்தப் பரிசோதனை மருந்தை உட்கொள்ள சம்மதிக்க வேண்டும், இல்லாவிட்டால், எந்த மருந்தும் கொடுக்கப்படாது' என்பதில் உள்ள கொடூரமான அநியாயம் முகத்தில் அறைகிறது. சர்வதேச மெத்தனம், சொந்த அரசாங்கத்தில் ஊழல், சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொள்ளைக்காரர்கள் என்று எல்லா திசைகளிலும் மக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள் என்ற நிதர்சனத்தை பாசாங்கமோ, பகட்டுக் கருணையோ இல்லாமல் சொல்கிறது.

போர்க்குணமுள்ள சமூக சேவகராக Rachel Weisz பிரமாதமாக நடித்திருக்கிறார். Ralph Fiennes-க்கு இது English Patient போன்ற ஒரு பாத்திரம் என்றாலும் நன்கு செய்திருக்கிறார். ஆப்பிரிக்க காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை.

படத்தின் முடிவு கண்ணீர்க் கவிதை.

விறுவிறுப்பாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கும் இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

4 Comments:

Blogger Jayaprakash Sampath said...

//எட்டாங்கிளாஸ் பரிட்சையில் தப்பு தப்பாய் விடை எழுதி விட்டு, அழகாய் இருக்க வேண்டும் என்பதற்காக, எல்லா வரிகளையும் ஸ்கேல் வைத்து அண்டர்லைன் பண்ணியது தான் நினைவுக்கு வருகிறது.
//

இதன் பொருத்தத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

எல்லாம் சரி, மூத்த மகனாக வந்த கேகே அருமையாக நடித்திருந்தார். படத்தில் தேறிய விஷயம் அது ஒன்று மட்டும் தான்.

September 05, 2005 1:41 PM  
Blogger kirukan said...

எட்டாங்கிளாஸ்ல மட்டும் தான் அப்படி செஞ்சிங்களா... ;-)

September 05, 2005 4:13 PM  
Blogger Srikanth Meenakshi said...

பிரகாஷ், உண்மைதான் - கேகேக்கு ஒரு ஜே ஜே போடலாம்.

கிறுக்கன், தொட்டில் பழக்கம் என்பார்களே...இப்போது கூட சில பிராஜக்ட் ரிப்போர்ட்டுகளில்... :-)

September 05, 2005 5:59 PM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

நல்ல விமர்சனம். அமிதாப் ரசிகனாக பார்க்கலாம் என்றிருந்தேன். - காப்பாற்றி விட்டீர்கள்.

அதுவும் பின்னணி இசை பற்றிய கருத்து - 'இதற்காடா இந்த அலம்பு அலம்பினீர்கள்?' -- தூள்!

September 05, 2005 11:58 PM  

Post a Comment

<< Home