காத்ரீனாவில் கறுப்பு-வெள்ளை
முதலில் செய்தி பற்றி: காத்ரீனாவினால் நியூ ஆர்லியன்ஸில் மற்றும் மிஸ்ஸிஸிப்பியில் விளைந்த சேதம் பிரமிக்க வைக்கிறது. ஒரு பெரும் ஊர், பெருத்த நாசத்தை அடைந்திருப்பது பல்லாயிரக்கணக்கான மக்களை பாதித்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பலரும் ஏழைகள் - இந்தப் பிரதேசமே அதிகம் செல்வச் செழுமையில்லாத இடங்களினால் ஆனது. "இது எங்கள் சுனாமி" என்று பிலாக்ஸி நகர மேயர் சொல்லியிருப்பது மிகையல்ல. நமது சுனாமிக்குத் தயங்காமல் ஆதரவுக் கரம் நீட்டிய இவர்களுக்கு உதவுவது அமெரிக்கத் தமிழர்களின்/இந்தியர்களின் கடமை.
http://redcross.org/
இரண்டாவது, இது பற்றிய செய்திகளைப் பற்றிய செய்தி ஒன்று: இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள், மேற்சொன்னது போல் பெரும்பான்மையும் ஏழைகள் - கறுப்பு/வெளுப்பு என நிற பேதமில்லாமல் ஏழைகள். அனைத்தையும் இழந்து அடுத்த வேளை உணவிற்கு வழியின்றித் தவிக்கும் இவர்களில் சிலர் மூடியிருக்கும் மளிகைக் கடைகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களை எடுத்திருக்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் இந்தச் சூழ்நிலையில் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால், இவை பற்றி வந்திருக்கும் செய்திகளைப் பாருங்கள் (படத்தில் சொடுக்கவும்):
இரண்டும் ஒரே நாளில் வெளியான செய்திகள். மேலுள்ள படத்தில் கறுப்பர் செய்வது கொள்ளையாம் (looting), கீழுள்ள படத்தில் வெள்ளைக்காரர்கள் செய்வது கண்டெடுப்பாம் (finding)! இயற்கை சீற்றம் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமுள்ள மோசமான குணங்களை சில சமயம் வெளிக் கொணரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், பார்வையாளர்களிடமுமா?
குறிப்பு: இந்தப் படம் ஃப்ளிக்கரிலிருந்து பெறப்பட்டது - மூலமும், விவாதமும் இங்கே
மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
3 Comments:
/இரண்டும் ஒரே நாளில் வெளியான செய்திகள். மேலுள்ள படத்தில் கறுப்பர் செய்வது கொள்ளையாம் (looting), கீழுள்ள படத்தில் வெள்ளைக்காரர்கள் செய்வது கண்டெடுப்பாம் (finding)! இயற்கை சீற்றம் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமுள்ள மோசமான குணங்களை சில சமயம் வெளிக் கொணரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், பார்வையாளர்களிடமுமா?/
இத்தகைய பார்வைகள் செய்தித்தாபனங்களிலே உண்டுதான். இதுகூட அப்படியாகவுமிருக்கலாம்;
ஆனால், மாற்றாக, இவ்விரு செய்திகளினையும் ஒத்து நோக்குகையிலே இன்னொன்று விடயத்தினையும் கருத்திலே கொள்ளமுடியும்; இரண்டு செய்திகளும் வெவ்வேறு செய்தித்தாபனங்களுக்காக, வெவ்வேறு செய்தியாளர்கள் தந்திருக்கக்கூடியவை; (Associated Press Vs. Agence France-Presse)
பெயரிலி, உண்மைதான். இந்த விஷயத்தினால், ஒரு நேரடியான, தெளிவான பேரினவாதப்பழியைப் போட முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நன்றி.
ஸ்ரீகாந்த்,
இப்போது (12:42 PM, Friday, 02) இதே படங்களினது குறிப்பு குறித்து, NPR இன் நிகழ்ச்சி நடத்துபவர் President of United Negro Fund மைக்கல் உலூமாஸிடம் குறிப்பிட்டார்.
Post a Comment
<< Home